" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
“அமா வேதிக் சர்வீஸஸ் (AMA VEDIC SERVICES) உங்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் உள்ள பாலம்
அமா வேதிக் சர்வீஸஸ்
அமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். இங்கு ஹோமம், பூஜை மற்றும் ஸ்ராத்தம் செய்வதற்கான இடமும் ,பொருட்களும், புரோஹிதர்களும் உண்டு.
அமா (AMA) பிறந்த கதை
அமா (AMA) என்பது ஒரு கந்தர்வரின் பெயர். இந்த கந்தர்வர் நாம் கடவுளுக்கு படைக்கும் நைவேத்யம் மற்றும்ஹோமத்தில் இடும் பொருட்களை, அவரிடம் கொண்டு போய் சேர்ப்பவர். இந்த கந்தர்வர் போல் எங்கள் மையமும், நீங்கள் வைதீக முறைப்படி செய்யும் பூஜை, ஹோமம்,மற்றும் அபர காரியங்களை கடவுள் மற்றும் பித்ருக்களிடம் சேர்க்கிறது.
எங்களின் குறிக்கோள்
விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள்ச மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள்ச மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.எங்கள் பணி இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பது எங்கள் அவா.
எங்கள் பணிகள்
நாங்கள் எங்கள் மையத்தில் பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்த எல்லா வசதிகளும் செய்து கொடுக்கிறோம்.
நீங்கள் உங்கள் புரோஹிதரை அழைத்து வந்தால் அதையும் ஏற்று கொள்கிறோம்.
உங்கள் மனை தேடி வந்தும் ஹோமங்கள், பூஜைகள் நடத்திக் கொடுக்கிறோம்.
எங்கள் வைபை வசதி, மின் வழி நேர் காணல் வசதிகள் (Live Streaming) உங்களை உங்கள் அருகில் இல்லாத உறவினர்களோடு இணைக்க உதவுகிறது.