பூஜை மற்றும் ஹோமம் இந்து சமயத்தின் முக்கிய அம்சமாகும். இவை இந்து கடவுள்களுக்கு நமது கோரிக்கை பூர்த்திக்காக செய்யப்படுபவை ஆகும். அக்னி குண்டத்தில் நெருப்பு மூட்டி அக்னி தேவனை எழுப்பி ஹோம குண்டத்தை அலங்கரித்து செய்யப்படும் ஹோமம், செய்பவரின் தீ வினைகளை அழித்து ஆன்ம சக்தியையும்,உடல் வளத்தையும்,வாழ்வில் பிரகாசத்தையும் தர வல்லது.
ஹோமம் விஞ்ஞான பூர்வமாகவும் நன்மை அளிக்கிறது. ஹோம புகை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்கிறது.ஹோமம் மூலம் அளிக்கப்படும் தானங்கள் ஒருவரின் கர்ம வினையை அழிக்க வல்லவை.
இந்துக்களால் செய்யப்படும் முக்கிய ஹோமங்கள்
மஹாகணபதி ஹோமம்
இது எந்த ஒரு தடையையும் உடைக்க வல்லது. எல்லா முயற்சிகளுக்கும் முன்னோடியாக செய்யப்படுகிறது.
சத்யநாராயண பூஜை
சத்யநாராயண பூஜையின் மூலம் ஒருவர் தன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த ஹோமம், மக்கட் செல்வம், வாழ்வில் வளம் மற்றும் முக்தி தரக் கூடியது .
மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்
சிவனை துதித்து செய்யப்படும் இந்த ஹோமம் மரணபயமின்மை,முக்தி,கொடிய நோய்களில் இருந்து விடுதலை தர கூடியது.
ஆயுஷ் ஹோமம்
ஆயுர் தேவதையை துதிக்கும் இந்த ஹோமம், ஆயுளை நீட்டித்து நோய் நொடி இல்லாமல் வாழ வழி வகுக்கும்.
நவக்ரஹ ப்ரீதி ஹோமம்
இது ஒன்பது க்ரஹங்களைப் போற்றி அவர்களால் ஏற்படும் கர்ம வினைகளுக்கு தீர்வு கொடுப்பது. பிரத்யேகமான தோஷங்களுக்கு நிவர்த்தி அளிப்பது.
எங்களின் சேவைகள்
நாங்கள் நீங்கள் விரும்பும் ஹோமத்தை நன் முறையில் நடத்திக் கொடுக்க ஏதுவான அனைத்து செயல்பாடுகளையும் திறம்பட செய்து காண்பிக்கிறோம். எங்களின் தொழில் நுட்ப கருவிகள் உங்களின் குடும்பத்தினரை ஹோம காரியங்களில் பங்கு பெற வகை செய்யும் ரீதியில் அமைக்கப் பெற்று உள்ளன. வைபை(WI-FI) வசதியுடன் உங்கள் குடும்பத்தினர் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஹோமத்தில் பங்கு கொள்ளலாம்.
பூஜை மற்றும் ஹோமம் உங்களுக்கு ஆன்ம சிந்தனையையும் வாழ்கை வளத்தையும் அருளும்.