ஸ்ராத்தம் என்பது நாம் நம் முன்னோர்களை நினைவு கூறும் சடங்கை குறிப்பது
ஸ்ராத்தம் நாம் நமது முன்னோரிடம் கொண்டுள்ள ஞாபகம் மற்றும் மரியாதை நிமித்தம் செய்யப்படுவது. ஒருவர் தன் குடும்பத்திற்கு ஸ்ராத்த சடங்கு செய்வது மூலம், தம் முன்னோரின் ஆசியையும் அன்பையும் பெறுகிறார். எள்ளும் ,பிண்டமும் அளித்து அவர்களை கரை சேர்க்கிறார். பித்ரு உலகத்திலிருந்து சுவர்க்கத்திற்கு கொண்டு சேர்க்கிறார்.
இதனால் சந்தோஷப்பட்ட நம் முன்னோர்கள், நமக்கு தனம், மழலை செல்வம் மற்றும் பல் வகை வளங்களையும் வழங்குகிறார்கள். ஸ்ராத்தம் செய்யும் போது, கர்த்தா பிராமணர்களை தன் பித்ருகளாக வரித்து அவர்களுக்கு உணவும் தானமும் அளிக்கிறார். மகிழ்ந்த முன்னோர்கள் அந்த பிராமணர்கள் வடிவில் ஆசி வழங்குகிறார்கள். ஸ்ராத்தம் ஒவ்வொரு மகனின் கடமை ஆகும்.
ஒவ்வொரு மகனும் தன் தாய் தந்தைக்கு மற்றும் முன்னோருக்கு பிண்டம் அளித்து ஸ்ராத்தம் செய்ய வேண்டியது கட்டாயம். ஏனெனில் நம் முன்னோர்கள் இறந்த பின் யமலோகத்திற்கு யம தூதர்களால் கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கே தத்தம் வினைப்பயன்படி சொர்கத்திலோ நரகத்திலோ காலத்தை கழிக்கிறார்கள். பின் பித்ரு லோகம் சென்று தங்களின் அடுத்த பிறவிக்கான நேரத்திற்கு எதிர்பார்த்து இருக்கிறார்கள். பித்ரு லோகத்தில் இருக்கும் போது அவர்கள் பசி மற்றும் தாகத்தால் தவிக்கிறார்கள். அவர்களின் மகன் அளிக்கும் பிண்டமும், எள்ளும், தண்ணீரும் அவர்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்கிறது. எனவே ஸ்ராத்தம் செய்வது ஒரு மகனின் தவிர்க்க முடியாத கடமையாகும். இல்லையெனில் அவன் பித்ரு சாபத்திற்கு ஆளாகிறான்.
ஸ்ராத்தம் செய்வதன் மூலம் ஒருவர் தன் முன்னோரை பிரம்மலோகம் அனுப்ப ஏற்பாடு செய்கிறார். மூன்று தலை முறையினர் பித்ரு லோகத்தில் காத்து இருக்கிறார்கள்.
மகன் ஸ்ராத்தம் செய்ய வேண்டியவர். அவர் தன் தந்தையை புத் என்னும் நரகத்தில் இருந்து விடுவிப்பதால் அவருக்கு புத்திரன் என்று பெயர். புத்திரன் இல்லாவிடில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சாஸ்திரத்தில் விதி முறைகள் உண்டு.
நாங்கள் பார்வண, ஹிரண்ய* முறையில் ஸ்ராத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம். தில ஹோமம் செய்யவும் ஏற்பாடு செய்கிறோம். ஸ்ராத்தம் செய்ய புரோஹிதர்கள் உங்கள் வீடு வந்தும் செய்து கொடுப்பார்கள். தில ஹோமம் எங்கள் இடத்திலும் ராமேஸ்வரத்திலும் செய்ய வசதி செய்து கொடுக்கிறோம்.
ஸ்ராத்தம் செய்து நீத்தார் கடன் தீருங்கள்