அஜ ஏகாதசி ஆவணி மாத தேய் பிறையில் வரும் ஏகாதசி ஆகும். இந்த வருடம் ஆகஸ்ட், 18, 2017, வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த ஏகாதசி அன்று மகா விஷ்ணுவையும் அன்னை லக்ஷ்மியையும் வணங்குவது வழக்கம். இந்த ஏகாதசி விரதம் இருப்போர்கள் தங்களின் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்
மன்னர் ஹரிசந்திரன் தன்னிலை தவறாத அரசர்.பொய்யாமையை தனது கொள்கையாக கொண்டவர். எந்த ஒரு நிலையிலும் பொய் உரைப்பதில்லை என உறுதி பூண்டவர். அவரது திடத்தை சோதிக்க வேண்டி மகரிஷி விச்வாமித்திரர் அவரை பொய் உரைக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்.மன்னர் மறுத்தார். இதனால் தனது நாடு,மனைவி மகனை இழந்தார்.
ஹரிசந்திர ராஜா ஒரு சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்தார். எண்ணற்ற சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து மனமுடைந்து போனார். ஒரு நாள் அவர் மனம் நொந்து இருந்த வேளையில் கௌதம முனிவர் அங்கு வந்தார். மன்னனின் நிலை கண்டு பரிதாப்பட்ட அவர் ஹரிச்சந்திரருக்கு அஜ ஏகாதசியின் மகிமையை எடுத்துரைத்தார்.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் மன்னர் இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெறுவார் என உரைத்தார். மன்னரும் அவ்வண்ணமே செய்து தான் இழந்த ராஜ்ஜியம், மனைவி மற்றும் மகனை திரும்ப பெற்றார். அவரது பொய்யாமையை பாராட்டி விஸ்வாமித்திரர் அவருக்கு ராஜ்யத்தை திரும்ப கொடுத்தார். அவரது இறந்த மகன் மீண்டும் உயிர் பெற்றான்.
அஜ ஏகாதசி விரதம் ஏனைய ஏகாதசி விரதம் போன்றதே..
ஏகாதசி அன்று காலை வீட்டை சுத்தம் செய்து ,பூஜை செய்யும் இடத்தில் அரிசியை பரப்பி அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும்..
கலசத்தின் வாயில் ஒரு சிகப்பு துணி வைத்து அதன் மேல் விஷ்ணுவின் படத்தையோ விக்ரகத்தையோ வைக்க வேண்டும்..
இதன் பின் விரதத்தை துவங்கி .நாள் முழுவதும் இரவு முழுவதும் ஹரி நாம ஸ்மரணையில் ஈடுபடலாம்.
அஜ ஏகாதசி விரதம் இருந்தால் பாப சுமையிலிருந்து விடுபடலாம்..
மோக்ஷம் அடையலாம்.
அன்னை லக்ஷ்மியையும் வழிபடுவதால் வாழ்வில் வளம் பெறலாம்.
இதன் விரத கதையை கேட்டாலே ஒரு குதிரை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
அந்த மகாபிரபு ஹரிசந்திரனுக்கு அவருக்கு நேரிட்ட கணக்கில்லா துன்பங்கள் நீங்க அஜ ஏகாதசி உதவியது என்றால் நாமும் அந்த விரதம் இருந்து பலன் பெறுவோமே. !
பாகவத கதைகளை தமிழில் படித்து ரசிக்க தவறாதீர்கள்!
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply