கார்த்திகைத் திருநாள் உங்கள் வாழ்வில் ஒளி உண்டாக்கட்டும்!
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கார்த்திகை நக்ஷத்திரம் வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. தீபம் என்பது ஒளியைக் குறிக்கும். கார்த்திகை நன்னாள் தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.இது ஒரு பெருவிழாவாக தமிழரால் மற்றும் மலையாளிகளால் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் கார்த்திகை தீபம் டிசம்பர் 2ம் தேதி சனிக் கிழமை அன்று வருகிறது.
எப்படி விளக்கில் திரி எரிந்து எண்ணையை உறிஞ்சி தீப ஒளியை ஏற்படுத்துகிறதோ அது போல் நம் உள்ளிருக்கும் தீய நினைவுகளை நீக்கி ஆன்மிக ஒளி வெளி வருகிறது. அது மட்டுமின்றி , தீப ஒளி நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகளை அழிக்க வல்லது.
முருகன் சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தவர். ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.பின் பார்வதி தேவியால் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட குழந்தையாக ஆக்கப்பட்டவர்.அவரின் பிறந்த நாளை நாம் கார்த்திகை பெருநாளாகக் கொண்டாடுகிறோம்.
கார்த்திகை பெருநாளில்தான் சிவ பெருமான் பெரிய ஒளிப் பிழம்பாக பிரம்மா மற்றும் விஷ்ணுவின் முன் தோன்றினார்.அவரின் ஆதியும் அந்தமும் தேடி இரு கடவுள்களும் சென்றனர்.ஒரு வராக உருவம் எடுத்து விஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார்.அவரால் சிவனின் அடியை காண முடியவில்லை. ஒரு அன்னத்தின் வடிவெடுத்து பிரம்மா மேலுலகம் நோக்கி சென்றார். உயர செல்லும் நேரத்தில் ஒரு தாழம்பூவை கண்டு சிவனின் தலையைக் கண்டுவிட்டதாக கூறினார். அவர் கூற்றின் பின்னிருந்த பொய்மையை அறிந்தவர் ஆதியும் அந்தமும் இல்லாத அருள்பெரும்ஜோதியாம் எம்பெருமான் .அவர் பிரம்மாவுக்கு தனி கோவில் அமைக்கப்பட மாட்டாது என சாபமிட்டார்.
திருவண்ணாமலை கோயிலின் மேற்புறத்தில் ஏற்றப்படும் பெரிய தீப ஒளியின் தரிசனம் வாழ்வின் பாபங்களைப் போக்கி முக்தி அளிக்கும் என்ற நம்பிக்கையோடு,இந்த தீப தரிசனத்திற்காக இந்துக்கள் கார்த்திகை அன்று அண்ணாமலை கோயில் வாசலிலோ தொலைகாட்சியின் முன்னாலோ தவம் கிடக்கிறார்கள்.
தீப ஒளி ஏற்றும் மங்கையர் மனம் சந்தோஷ அலைகளில் துள்ளும் நாளிது. மற்றும் அவர்கள் தங்கள் சகோதர பாசத்தை எடுத்து காட்ட உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. வட நாட்டு ராக்கியை போல் தென்னாட்டில் கார்த்திகை விழா சகோதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பெண்டிர்,பொரி உருண்டை பிடித்து, பூவும் பழமும் படைத்து முருகனையும் சிவனையும் வழிபடுகிறார்கள்.
கார்த்திகை தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா.
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா விப்ரா
இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் பின்வருமாறு
"யார் மீது இந்த தீப ஒளி படுகிறதோ,அந்த ஜீவன் பாப சுமையிலிருந்து விடுபடட்டும். பிறவிப் பிணியிலிருந்து விடுபடட்டும்.முக்தி பெறட்டும்".
இந்நாளில் .அனைவரும் மனம் களித்து, இறைவனை வேண்டி தீபம் ஏற்றி ஆன்ம ஒளி பெறுவாராக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply