ङ्गा गीता च गायत्र्यपि च तुलसिका गोपिकाचन्दनं तत् सालग्रामाभिपूजा परपुरुष तथैकादशी नामवर्णा: ।
நாராயணீயத்தின் மேற் கண்ட ஸ்லோகம் 8 விஷயங்களைக் கூறி அதில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்தால் நாராயணனை அடைவது உறுதி என்கிறது. அந்த எட்டும் என்ன?
கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசி கொண்டு வீட்டில் பூஜை செய்தல்,கோபி சந்தனம் அணிதல்,சாலிகிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல்,பகவான் நாமாவை உச்சரித்தல்.
இந்த எட்டு செயல்களில் ஏதாவது ஒன்றை செய்தால் நமக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பூதிரி சொல்லும் செய்தி. இதில் ஏகாதசி விரதம் மிகவும் எளிமையானது. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும், எப்படி கடைப்பிடிக்க வேண்டுமென பார்ப்போம்
ஏகாதசி என்றாலே பகவான் விஷ்ணுவின் நாமம் நம் மனதில் தோன்றுவது திண்ணம். இந்த நாள் விஷ்ணுவுக்கு உகந்த நாள் மற்றும் பகவான் இந்த நாளை தனதாகவே ஏற்றுக் கொண்ட ஒரு தினம். இந்த நாளில் விஷ்ணுவின் ஆராதனை மேற்கொண்டு விரதமிருப்பவர் பலர். மகாவிஷ்ணுவின் த்யானத்தோடு விரதமிருந்து இந்த நாளில் தொழுதால் நம் முன்வினைகள் நீங்கி நாம் இறைவனடி சேர்வது நிச்சயம். ஏகாதசியை அதிகமாக அனுசரிப்பவர்கள் வருடத்தில் இருக்கும் 24 ஏகதாசிகளையும் அனுசரித்து வைகுண்ட பதம் தேடுவர்.
சரி, இந்த ஏகாதசியின் பெயர் காரணம் என்ன? அது எவ்வாறு அனுசரிக்கப்பட வேண்டும் என்ற விவரங்களை இப்போது பார்ப்போமா?
ஏகாதசி சந்திரனின் சஞ்சாரத்தில் வளர் பிறையிலும், தேய் பிறையிலும் 11 வது நாளாகும். ஏகாதசி என்பவள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய பெண் சக்தியாகும். முரன் என்ற அரக்கன் எல்லோரையும் துன்புறுத்த, பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சமடைய, அவரும் பகவான் விஷ்ணுவே முரனை அழிக்க ஏற்றவர் எனக் கூறினார். விஷ்ணுவும் முரனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவை என சிந்தித்த வண்ணம் ஒரு குகையில் நித்திரை கொள்ள, அங்கு அவரை அழிக்க வந்த முரனை விஷ்ணுவிடமிருந்து தோன்றிய பெண் சக்தியானது அழித்தது.
துயில் எழுந்த விஷ்ணுவும் அந்த பெண் சக்தியை பாராட்டி அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார். எந்த நாளில் இந்த சம்பவம் நடந்ததோ அந்த நாளில் ஏகாதசி விரதம் இருப்பதை பக்தர்கள் வழக்கமாக கொண்டனர்.
பத்ம புராணத்தில் ஏகாதசி பற்றி ஒரு குறிப்புண்டு. பகவான் விஷ்ணு மனிதர்கள் செய்யக் கூடிய பாபங்களை பாப புருஷன் என்னும் வடிவத்தில் அமைத்து அந்த பாபங்களுக்கு தண்டனைகளும் ஏற்படுத்தினார். இதற்காக யமலோகத்தை சிருஷ்டித்து யமராஜனையும் அந்த லோகத்திற்கு பொறுப்பாக்கினார்.
ஒருநாள் விஷ்ணு யமலோகத்திற்கு விஜயம் செய்த போது மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிரங்கி ஏகாதசி விரதம் பற்றி எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என இயம்பினார்.
கிருஷ்ணர் அர்ஜுனருக்கு உபதேசித்ததாக ஒரு செய்தி உண்டு. உத்பன்ன அல்லது உற்பத்தி ஏகாதசி ,அதாவது நவம்பர்-டிசம்பர் மாதத்தில்தேய் பிறையில் தோன்றும் ஏகாதசி அன்று விரதம் ஆரம்பிப்பது உத்தமம்.
ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். இந்த விரதம் அனுசரிப்பவர்கள் தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறு நாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருப்பார்கள். அதற்கு மறு நாள் த்வாதசி அன்று காலையிலேயே உணவு உண்பார்கள். இதனால் ஒருவரின் ஜீரண உறுப்பு நன் முறையில் செயல்படும் என்பதில் ஐயமில்லை.கடவுளின் சிந்தனையில் மனம் ஈடுபடுவதால் மனத் தூய்மையும் அமையும். இறைவனை பற்றிய நற்சிந்தனையில் ஆத்மா ஈடுபடுவதால் அது பிறவித்துன்பத்திலிருந்து விடுபடும்.
ஏகாதசி அன்று தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பவர் உண்டு. அவ்வாறு கடைப்பிடிக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவு உண்ணலாம். காய்கறி, பழம், பால் அருந்தி விரதம் இருப்பவர்களும் உண்டு.
பால், பழம், உலர்ந்த பழங்கள்,பாதாம் பருப்பு போன்றவை, எளிமையானசிற்றுண்டி வகைகள்
உருளை கிழங்கு ,பூசணிக்காய், பப்பாளி காய், வெள்ளரி காய், பலா பழம், எலுமிச்சை, தேங்காய்
வெங்காயம், பூண்டு, சிவப்பு பருப்பு, காரட், தக்காளி, கத்திரிக்காய்,
காலி ப்ளவர், பட்டாணி, பீன்ஸ் வெண்டைக்காய், முருங்கை, வாழைப் பூ
தானியங்கள், தானியங்களால் ஆக்கப்பட்ட மாவு வகைகள் மற்றும் எண்ணெய்கள்,தேன்
இவ்வாறாகஏகாதசி விரதம் உடலுக்கும்,மனதிற்கும் ஆரோக்கியம் அளித்து பிறவியிலிருந்து முக்தியையும் அளிக்க வல்லது. நாராயணன் நாமம் சொல்லி பிறவி பெருங்கடல் நீந்தி அவனடி சேர்வோம்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply