ஹோமத்தின் மூலம் நாம் ஒரு தேவதையை அக்னி மூலம் எழுப்பி நமது கோரிக்கையை சமர்ப்பித்து பலன் அடைகிறோம். பல வித திரவியங்களும், நெய்யும், நைவேத்யமும் சேர்த்து மந்திரங்களால் உச்சாடனம் செய்து அந்த தெய்வத்தை மகிழ்விக்கிறோம். பலனாக நாம் விரும்பியதை பெறுகிறோம். ஆன்ம சன்மானமும் பெறுகிறோம்.
கணபதி ஹோமம் என்பது எல்லோராலும் செய்யப்படுவது. எந்த காரியத்திற்கும் ஆரம்பமாக அமைவது. நாம் செய்ய இருக்கின்ற செயலை தடையின்றி முடிக்க உதவுவது. திருமணமாகட்டும், புது வீடு விழாவாகட்டும், கணபதி ஹோமமின்றி எந்த காரியமும் நடைபெறாது. வியாபார ஸ்தலத்திலோ, புது வியாபாரம் தொடங்கும் முன்னோ கணபதி ஹோமம் செய்தால் தொழில் செழிக்கும், தடைகள் நீங்கும், வியாபாரம் முன்னேற்றம் காணும். எங்கள் கணபதி ஹோமம் திட்டங்கள் பற்றி இங்கே பார்க்கவும்.
கணபதி ஹோமத்தை தொடங்கு முன் நாம் நம் பெரியோர்களின் ஆசியை கோர வேண்டும்.இந்த ஹோமத்தை தடையின்றி நடத்தி நன்மைகள் அடைய ஆசி கேட்க வேண்டும். நமது வீட்டில் உள்ளோர் எல்லோருடைய பெயர் நக்ஷத்திரங்களை கூறி, தர்பையை காலுக்கு கீழ் போட்டு, பவித்ரத்தை விரலிடுக்கில் வைத்துக் கொண்டு, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்து ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
சங்கல்பம்: நம்மை வழி நடத்தி இந்த ஹோமத்தை சிறப்பாக செய்ய உதவும் அந்தணர்களை ஆசாரியார்களாக ஏற்று, ராம நாமத்தை உச்சரித்த வண்ணம் வணங்க வேண்டும்.
புண்யாகவாசனம்: ஒரு சுத்தானமான இடத்தை தேர்ந்தெடுத்து அதை பசும் சாணம் கொண்டு மெழுகி, நெல் பரப்பி, அங்கு ஒரு வாழை இலையில் அரிசியை பரப்பி ,அதில் ஒரு தாமரை வரைந்து, அந்த தாமரையின் நுனிகளை தர்ப்பையால் அலங்கரித்து, அந்த தாமரையின் நடுவில் ஒரு கலசம் வைக்க வேண்டும். கலசத்திற்குள் ஏலக்காய்,பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீரை நிரப்ப வேண்டும். கலசத்தின் தலையில் மாவிலை வைத்து தேங்காய் வைக்க வேண்டும். இவற்றிக்கு உண்டான மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஹோமம்: ஹோம குண்டத்தில் அக்னியை மூட்டி தேவதைகளை ஆவாஹனம் செய்து மஹா கணபதி ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும். கணபதிக்கு 16 வகையான உபசாரங்களை மந்திரங்களோடு செய்து நெய்யை அக்னியில் விட வேண்டும். எட்டு வகை திரவியம், நெய், அருகம் புல், மூன்று கண் உள்ள தேங்காய், நெல் ஆகிவற்றை ஹோமத்தில் போடலாம். மோதகம் அர்ப்பணிப்பது மிகவும் சிறந்தது.
கணபதி ஹோமம் செய்வதால் வாழ்வில், வியாபாரத்தில் தடை கற்களை தாண்டி வெற்றி காண்பது நிச்சயம். இதையும் தாண்டி, நமக்கு ஆன்மிக வாழ்வில் ஒரு தூண்டுதலை அளிப்பது இந்த ஹோமத்தின் பெருமை. ஹோமத்தின் குண்டத்தை சற்றே உற்று பார்த்தால் ஒரு யானை தனது நாலு கால்களில் நின்றுகொண்டு இருப்பது போல் இருக்கும். ஹோம குண்டத்தின் நாலு மூலைகளும் யானையின் நாலு கால்களைப் போல் தெரியும்.விநாயகர் இவ்வாறாக வாழ்வில் வெற்றிக்கு வழி நல்குவதோடு ஆத்ம ஞானமும் அளிக்கிறார்.
கணபதி ஹோமம் செய்து நற்பலன் பெற்று ஆன்மிக நாட்டமும் பெறுவோமாக!
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply