கந்த சஷ்டி - சூர சம்ஹாரம் | Ama Vedic Services
அக்டோபர் 22, 2017 04:58 பிப

கந்த சஷ்டி - சூர சம்ஹாரம்

சூர சம்ஹாரம், அக்டோபர் 25, 2017

 

கந்த சஷ்டி ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமையில் ஆரம்பித்து  சஷ்டி அன்று சூர சம்ஹாரத்தில்மு டிகிறது. இந்த ஆறு நாட்களும்  முருக பக்தர்களால்  பெரிதும் மதிக்கப்படுகின்றன. அறுபடைவீடு முதலிய கோயில்களில் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன.

 

மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிபடுவதன மூலம், .பக்தர்கள் தங்கள் வாழ்வின் குறைகளை நீக்கி மனம் விரும்பிய வரத்தைப் பெறுகிறார்கள்.

 

கந்த சஷ்டி கொண்டாடுவதின் பின்னணிக் கதை (சூர சம்ஹாரம்)

 

கந்த சஷ்டி கொண்டாட்டம்   கந்தனின் பிறப்பின் மகிமையை எடுத்துக்  கூறுகிறது.

 

சூரபத்மன்  ஒரு கொடிய அரக்கன்.அவன் தனது  சகோதரர்களாம் சிங்கமுகன் மற்றும் தாரகாசுரனோடு சேர்ந்து இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்தான்.கடுந் தவமிருந்து,பிரம்மாவிடமிருந்து பல வரங்களைப் பெற்றான். தேவர்களைத் தோற்கடித்து,மூன்று உலகங்களையும் வென்றான்.

 

சூரபத்மனைத் தோற்கடிக்க இந்திரன் தனது  மகன் சயந்தனை அனுப்பினான். சயந்தன் சூரபத்மனால் எளிதில் தோற்கடிக்கப்பட்டான். சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்காமல், தேவர்கள் பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

 

பிரம்மா “சூரபத்மன் ஏற்கனவே என்னிடம் வரங்களைப் பெற்றவன். என்னால் அவனுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சிவனை அணுகுங்கள். அவர் இப்போது தவத்தில்   ஆழ்ந்து உள்ளார். அவரது தவத்தினை கலைக்க மன்மதனை அனுப்புங்கள்.”என உரைத்தார். 

 

பிரம்மாவின் கூற்றுக்கிணங்க, தேவர்கள் மன்மதனை சிவபெருமானின் தவத்தை கலைக்க அனுப்பினர். மன்மதனும் நெற்றிக்கண்ணர் மேல் அம்பு எய்ய, கோபமுற்ற  சிவனார் தனது மூன்றாம் கண்ணைத்  திறந்து மன்மதனை எரித்து விட்டார்.

 

இதே நேரத்தில்,சூரபத்மனின் அட்டகாசங்கள் எல்லை மீறின. அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி முருகனை சிவன் படைத்தார்.தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப் பொறிகளை படைத்த இறைவன் அந்த தீக் கதிர்களை கங்கை ஆற்றில் சேர்க்க வாயுவை பணித்தார். அவர்களும் அந்த நெருப்புத் துண்டுகளை கங்கை ஆற்றில் சேர்த்தனர். கங்கை ஆறு அவற்றை  சரவணப் பொய்கைக்கு எடுத்துச்  சென்றது.   

 

சரவணப்  பொய்கையில்  ஆறு குழந்தைகளாக இருந்த முருகனை ஆறு கார்த்திகைப் பெண்டிர்கள் வளர்த்தனர். இந்த ஆறு குழந்தைகளை அன்னை பார்வதி ஒரு குழந்தையாக மாற்றினாள்.  ஆறு முகங்களுடன் இருந்த அந்த குழந்தைக்கு முருகன் எனப் பெயரிட்டாள்.

 

Sura Samharam

இந்த சமயத்தில் சூரபத்மன் அளவிலாத கொடுமைகளை செய்து கொண்டிருந்தான். அவனை வதம் செய்ய முடிவு செய்த சிவனார் முருகனை தனது படைகளுக்கு தளபதியாக நியமித்தார். அன்னை பார்வதி முருகனுக்கு ஒரு வேலினை அளித்தாள். தனது சக்தியை அதில் உருவேற்றி, அதனை முருகனுக்கு ஆயுதமாக அளித்தாள்.

 

முருகன் வேலோடும்,படையோடும் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். முதலில் சிங்கமுகனையும், தாரகாசுரனையும் அழித்தார். இறுதியில்,  சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகன் அந்த மரத்தை  தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார்.

 

இறக்கும் தருவாயில், சூரபத்மன் தனது உடலின் ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறி அவை முருகனின் வாகனமாகவும்,கொடியாகவும் திகழ வேண்டும் என வரம் கேட்டான்.முருகனும் அவ்வண்ணமே வரம் வழங்கினார்.

 

இன்றும் சூரபத்மன் முருகனின் மயில் வாகனமாகவும்,சேவலாக  அவரின் கொடியிலும்  இருப்பதைக் காண்கிறோம்.இவ்வாறாக  சூரபத்மன் அழியாப் புகழ் பெற்றான் .முருகனின் சமயத்தினால் செய்த உதவிக்கும் வீரத்திற்கும் வெகுமதியாக இந்திரன்  தனது  மகள் தேவயானையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

 

கோவில்களில் கந்த சஷ்டி பெருவிழா 

 

திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடாம் முருகனின் ஆறு கோயில்களில் கந்த சஷ்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 

ஐப்பசி மாத வளர்பிறை பிரதமையில் ஆரம்பிக்கும் கந்த சஷ்டி விழா  கடைசி நாளான சஷ்டி அன்று, சூர சம்ஹாரத்துடன் முடிவடைகிறது. அசுர பொம்மைகளை எரித்த பின் ,முருகன் சூரபத்மனை அழிக்கும் காட்சி நடைபெறுகிறது.

Sura samharam

 

கந்த சஷ்டி நாட்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் வழிபாடு நடைபெறுகின்றன. பக்தர்கள் கந்த சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானை வணங்குகிறார்கள்.

 

காவடி, பால் குடம், மற்றும் பல விதமான நேர்த்தி கடன்களை  செலுத்தி பக்தர்கள் முருகன் அருள் பெறுகிறார்கள்

 

கந்த சஷ்டி விரத முறை

 

கந்த சஷ்டி விரதமிருப்பவர்கள் ஆறு நாளும் விரதமிருப்பர்கள்.

 

பொதுவாக அசைவ உணவு உண்பதில்லை.வெங்காயமும் பூண்டும் தவிர்த்து விடுவார்கள்.

 

அதி காலை எழுந்து ,குளித்து,முருகனின் படத்திற்கு முன் வணங்கி  விளக்கு ஏற்றி,’கந்த சஷ்டி கவசம்’,’சுப்பிரமணிய புஜங்கம்’ போன்ற ஸ்லோகங்களை சொல்ல வேண்டும்.

 

ஒரு பொழுது உணவு உண்பவர்கள் மாலையிலோ,காலையிலோ,சிற்றுண்டி உண்பது உண்டு.

 

பால்,பழம் தண்ணீர் மட்டும் அருந்துபவர்கள் உண்டு.

 

தினமும் கோயிலுக்கு சென்று முருகனை வழிபடுவார்கள்.

 

கந்த சஷ்டி விரதமிருந்தால்,வாழ்வில் வளமும்,மனத் தூய்மையும் கிடைக்கும் என்பது உறுதி.

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    4 + 6 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Currently, there is no weather information available.

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK