அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.பூக்களாலும் குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறைகளில் ஒன்று.
அர்ச்சனை என்றால் என்ன?
அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம்,பெயர் ,நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
கோத்திரம் நட்சத்திரம் சொல்வது ஏன்?
ஒருவர் சங்கல்பம் மேற்கொள்ளும் போது தனது கோத்திரத்தை சொல்கிறார்.இது அவரது பரம்பரையைக் குறிக்கும். அவர் பிறந்த நட்சத்திரத்தையும்,பெயரையும் சொல்லும் போது அவருக்கென தனி ஒரு அறிமுகம் கிடைக்கிறது.குருக்கள் சங்கல்பம் செய்யும் போது நிகழ் காலத்தை பற்றிய விவரங்களை சொல்கிறார்.எனவே ஒரு மனிதர் தனது கோத்திரம்,நட்சத்திரம் ,பெயர் ஆகியவற்றை சொல்லி தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார். இதனால் அவரால் தனது கோரிக்கைகளை இறைவனிடம் தனிப்பட்ட முறையில் சேர்த்து பலன் பெற முடிகிறது.
அர்ச்சனை எப்போது செய்யப்படுகிறது?
அர்ச்சனை ஒருவரது பிறந்த நாள்,திருமண நாள் அல்லது இவை போன்ற சிறப்பு மிக்க தினங்களில் செய்யப்படுகிறது.மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோயில் சென்று அர்ச்சனை செய்கிறார்கள்.
அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கலாம். அல்லது வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டுவதற்காக இருக்கலாம். துன்பங்களை தாங்கும் மன உறுதி கேட்கலாம்.
சிலர் இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள்.இது எல்லோருக்கும் பலன் அளிக்கும் .இதுவும் ஒருவகையான மனிதாபிமானம் மிகுந்த செயல்தானே?
கோயிலில் அர்ச்சனை செய்வது வீட்டில் பூசை செய்வதை காட்டிலும் சக்தி வாய்ந்தது.அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனாங்களாலும் ,பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக திகழ்கிறது.கேட்டதை கொடுக்கும் என்தில் ஐயம் உண்டோ?
சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை செய்கிறார்கள்.இது பரிஹாரம் போன்றது.சஷ்டி அன்றும் பிரதோஷம் அன்றும் இப்படி செய்வதை பார்க்கலாம்.வாழ்வின் குறைகள் தீர இது ஒரு வழி.
ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நலம்.அந்த நட்சத்திர நாதன் ஆசிகளை அள்ளி வழங்குவார்.இதே போல் அறுபது வயது கடக்கும் போதும் ஒவ்வொரு மாதமும் பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நல்லது.தடைகற்கள் நீங்கி அறுபது சுமுகமாக சஷ்டி அப்த பூர்த்தியில் முடியும்.
நாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply