கணபதி முழு முதற் கடவுள்.நம் தொல்லைகளை துடைக்கும் கருணை கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. நாமும் இந்த பூலோக வாழ்வில் அன்றாடம் அல்லல்படுகிறோம். எனினும் கணபதியைத் தொழுது, அவரது பாதம் பற்றி நமது துன்பத்தை துடைப்போம் என எண்ணுகிறோமா?
இல்லை. ஏனெனினில் நாம் வாழ்வது கலியுகத்தில்.அன்றாடம் பலவிதமான கெட்ட செய்திகளையும்,விபத்துக்களையும், நோய் நொடி பற்றிய விசாரங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் நமக்கு பூஜை, ஹோமம் என்றெல்லாம் யோசிக்க நேரம் உள்ளதா?
இல்லை என்பதே பதில். உணவு உண்ண, உறங்க நேரம் இல்லாமல் தவிக்கும் நமக்கு கணபதிக்கு ஒரு அருகம்புல்லையாவது சமர்ப்பித்து ஆராதிப்போம் என்ற எண்ணம் இருக்கிறதா?
கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் கணபதி
விநாயகர் விக்னம் களைபவர். நம் தொல்லைகளிலிருந்து விடுதலை தேடித் தருபவர். அவரை ஹோமம் மூலம் வணங்கினால் விக்னங்கள் நொடிப் பொழுதில் விலகும் என்பது உறுதி.
சரி, என்ன செய்வது?வீட்டில் ஹோமம் வளர்ப்பதா? நமது அவசர உலகத்தில் இது சாத்தியமா? கட்டுபடியாகுமா? பூஜை சாமான் வாங்க வேண்டும். புரோஹிதரை கேட்க வேண்டும். எத்தனை விஷயம்...
இதற்காகவே தான் வேதிக் மையங்கள் தோன்றி உள்ளன. உங்கள் தேவை அறிந்து பணி புரிகின்றன. நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே. பணத்தை கட்டி,ஹோமம் நடக்கும் அன்று வந்தால் போதும்.மற்ற வேலைகளை மையத்தில் உள்ளோர் பார்த்துக் கொள்வார்கள். இதிலும் சமஷ்டி கணபதி ஹோமம் செய்தால் மிகவும் விசேஷம்.
என்னவென்று கேட்கிறீர்களா? பல பேரோடு சேர்ந்து நீங்கள் கணபதி ஹோமம் செய்வதற்கு சமஷ்டி கணபதி ஹோமம் எனப் பெயர்.
எப்படி? நான் ஒருவனாக என் குடும்பத்தாரோடு ஹோமம் செய்வதன் பலனும் பலரோடு சேர்ந்து செய்வதன் பலனும் ஒன்றா? இது எப்படி?- நீங்கள் நினைப்பது புரிகிறது. பதில் இதோ
சமஷ்டி ஹோமம் என்றால் என்ன?
ஒரு ஹோமத்தை பலரின் சங்கல்பங்களோடு நடத்துவதே சமஷ்டி ஹோமம். ஹோமம் நடத்தும் புரோஹிதர் உங்களின் கோத்திரம், பிறந்த நக்ஷத்திரம், குடும்பத்தாரின் நட்சத்திரங்களை உச்சரிக்க சொல்வார். அதே போல் பங்கேற்கும் மற்ற குடும்பத்தினரிடமும் சொல்வார். ஒவ்வொருவரும் தத்தம் நட்சத்திரம் ஆகிய விவரங்களை கொண்டு தனித்தனியே சங்கல்பம் செய்வார்கள். பின்னர் அவர்கள் தத்தம் அபிலாஷைகளை ஹோமம் எந்த கடவுளுக்கு செய்கிறோமோ அந்த கடவுளிடம் வேண்டிய பிறகு புரோஹிதர் ஹோமத்தை ஆரம்பிப்பார்.
இதில்வி ஷயம் என்னவென்றால், நீங்கள் ஹோம பலனை முழுமையாக அடைவீர்கள். ஏனென்றால் உங்கள் சங்கல்பம் தனிப்பட்டது, உங்களுக்கு உரியது. அதே சமயம் நீங்கள் ஹோம செலவை பலருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். இதனால் உங்களுக்கு செலவு கணிசமாக குறையும். அதுவும் இப்போதெல்லாம் நீங்கள் மையத்திற்கு செல்ல வேண்டும் என்பது கூடக் கிடையாது. தொலை பேசியிலோ ,skype மூலமோ சங்கல்பம் செய்து கொள்ளலாம். இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு வசதியாக உள்ளது.
ஏன் சமஷ்டி கணபதி ஹோமம் சிறந்தது?
பல வேதிக் மையங்கள் சமஷ்டி கணபதி ஹோமத்தை மாதந்தோறும் செய்யும் வருடாந்திர திட்டங்களை அளிக்கிறார்கள். இதனால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் கணபதி ஹோமம் குறைந்த செலவில் செய்து முழு பலனை அடைகிறீர்கள்.
சமஷ்டி கணபதி ஹோமம் செய்வதின் பலன்கள்
சமஷ்டி கணபதி ஹோமத்தின் வருடாந்திர திட்டத்தின் மூலம் நீங்கள் மாதம் ஒரு முறை ஹோமம் செய்கிறீர்கள்.இதனால் கணபதியின் கடாக்ஷத்திற்கு பாத்திரமாகிறீர்கள்.
கணபதி ஹோமம் அடிக்கடி செய்வதால் வாழ்வில் வளம்,ஆரோக்யம், ஆன்மிக சக்தி வளரும்.
கணபதி மூலாதார சக்கரத்திற்கு அதிபதி.அவரை தொழுவதால் செல்வம் பெருகும்.
ஹோமப் புகை உடலுக்கு நல்லது.அதில் உள்ள மூலிகைகள் நம்மை சுற்றி உள்ள கிருமிகளை அழித்துநல்ல காற்றினை அளிக்கின்றன.அதை சுவாசிப்பதால் உடல் ஆரோக்கியம் வளருகிறது.
கணபதி குண்டலினி சக்தியை எழுப்ப வல்லவர்.அவரை அடிக்கடி தொழுவதால் ஆன்மிக ஒளி நம்முள் பிறக்கும்.
வெற்றிக்கு அதிபதி கணபதி.அவர் நமது முயற்சிகளில் எந்த ஒரு தடைக்கல் இருந்தாலும் போக்கிவிடுவார். எனவே அவரை அடிக்கடி வணங்குவது மூலம் நாம் நம் வாழ்வின் சோதனைகளை எளிதாக வென்றுவிடலாம்.
வாழ்க்கையில்காப்பீட்டு திட்டங்களை நம் வசத்தில் வைத்து உள்ளோம்.எந்த ஆபத்திற்கும் பாதுகாப்பை முன்னதாகவேதேர்வு செய்து வைத்துக் கொள்கிறோம்.அப்படி இருக்க நாம் ஹோமம் என்னும் காப்பீட்டு திட்டம் மூலம் ஏன் கணபதியை அணுகக் கூடாது?மாதந்தோறும் ஒரு சமஷ்டி கணபதி ஹோமம் செய்யுங்கள்.கடவுளிடம் உங்கள் பந்தத்தை வளருங்கள். அவர் உங்களை எல்லா ஆபத்திலிருந்தும் பத்திரமாகக் காப்பார் அல்லவா?
வ்யாபாரிகளுக்கு இது ஒரு நல்ல திட்டம்.நீங்கள் ஒரு புது தொழில் ஆரம்பிக்கும் போது,புது கணக்கு தொடங்கும் போது,கணபதி ஹோமம் செய்வது நல்லது.தடையின்றி உங்கள் வியாபாரம் செல்லும்.அந்த நாளை கணபதி சமஷ்டி ஹோமத்தை ஒட்டி வைத்துக் கொண்டால், உங்களுக்கு ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.
உங்களுக்கு கேது தசையா?அல்லது வீட்டில் யாருக்காவது கேது பகவானின் தொந்தரவு இருக்கிறதா?கவலை வேண்டாம்.சமஷ்டி கணபதி ஹோமம் கை கொடுக்கும்.கேதுவின் ஆதிக்கத்தைக் குறைக்க நாம் கணபதியைத்தான் வணங்கவேண்டும்.அதற்கு சமஷ்டி ஹோமம் போதுமே.
கணபதி பூஜையை விட ஹோமம் பலனுடையது
ஒரு சிறு அருகம் புல்லில் பிரசன்னமாகுபவர் கணபதி. ஹோமம் செய்யும் போது நாம் மந்திரங்கள் துணை கொண்டு அக்னி வழியாக கணபதியை எழுப்புகிறோம்.மோதகம் போன்ற நெய்வேத்தியம் வழங்குகிறோம்.அவரும் அதற்கான முழு பலனை நமக்கு அருளுகிறார்.இதனால் ஹோமம் செய்வது நல்லது.
எனவே வருடாந்திர கணபதி சமஷ்டி ஹோமத்தில் பங்கேற்று மனத்தையும் உடலையும் வளமாக வைத்திருந்து வாழ்வின் தடைக்கற்களை முறியடித்து கணபதியின் அருள் பெற்று நல வாழ்வு வாழ்வோமாக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply