சித்திரா பௌர்ணமி சித்திரை மாதம் முழு நிலவன்று சித்திரை நக்ஷத்திரத்தோடு கூடி வருகிறது. இந்த நாள் முழு நிலவின் பிரகாசத்தையும் சூரியனின் சக்தியையும் பிரதிபலித்து காட்டும் பொன்னாளாகத் திகழ்கிறது.
சந்திரனின் கதிர்கள் அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் கடல் அலைகளை மட்டும் அல்லாமல் மனித மனதையும் பாதிக்கும் என்பது பலரும் அறிந்ததே. முழு நிலவின் கதிர்கள் மனித மனதில் நல்ல சிந்தனைகளையும் , ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் உருவாக்குகின்றன. சித்திரா பௌர்ணமி அன்று சந்திரனின் ஆதிக்கம் முழுமையாக பூமியின் மேல் படுகிறது. இதனால் மக்களின் மனதில் தூய சிந்தனைகள் உருவாகும்.
மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் சூரியன் இந்த நேரத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷத்தில் அவர் உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது சக்தியும் அபாரம். இப்படியாக சந்திரனும் சூரியனும் தங்களது சக்திகளை நல்ல முறையில் வெளிப்படுத்தும் அற்புத நாள் சித்திரா பௌர்ணமி.
சித்திரா பௌர்ணமி அன்று யமதர்மரின் உதவியாளராம் சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நாம் இந்த பூமியில் செய்யும் ஒவ்வொரு கர்மாவிற்கும் நமக்கு நல்ல அல்லது தீய பலன் உண்டு. அது நமது செயல்களை பொறுத்துஅமையும். நமது வினைகளை பட்டியல் போட்டு நமது இறப்பிற்கு பின் அதனை யமனிடம் அளிப்பவரே சித்திரகுப்தர். அவரின் பட்டியல் பார்த்தே யமன் நமக்கு தீர்ப்பளிக்கிறார்.
சித்திர குப்தர் இன்று நம்மை விண்ணுலகிலிருந்து கண்காணிக்கிறார். இதனால் நமக்கு நமது வினைகள் நன்மை பயப்பவை ஆக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும். மற்றும்,’சித்திரம்’ என்றால் ஓவியம்.’குப்த’ என்றால் மறைந்து இருக்கும் எனப் பொருள். சித்திரகுப்தர் நமது கர்மாக்களை ஓவியங்கள் போல் குறிப்பெடுத்து வைத்துள்ளார் என்பதே இதன் உட்பொருள்.
சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் கோயில் உண்டு. சித்திரா பௌர்ணமி அன்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு உண்டு. திருவக்கரையில் உள்ள சந்திர மௌலிஸ்வரர் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில், திருகொடிகாவலில் உள்ள திருகோட்டீஸ்வரர் கோயில் ஆகியவற்றிலும் இன்று சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு உண்டு.
இந்திரன் தேவர்களுக்கு தலைவர். அவரின் குரு பிரஹஸ்பதி ஆவார். ஒரு வேளையில் இந்திரன் தனது குருவின் சொற்களுக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குரு அவரை விட்டு நீங்கி சென்றார். தனித்து விடப்பட்ட இந்திரனும் பாபங்கள் பலவும் செய்தார். சில காலம் கழித்து மீண்டும் வந்த குரு இந்திரனின் பாபங்கள் தொலைய பூமியில் புனித யாத்திரை மேற்கொள்ள சொன்னார்.
பூமிக்கு வந்த இந்திரன் ஒரு இடத்தில் தனது பாபங்கள் எல்லாம் தொலைந்தாற் போல் உணர்ந்தார். அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கத்தை கண்டார். அதற்கு கோயில் கட்டி பூஜை செய்தார். அருகே இருந்த குளத்தில் இருந்து பொற்றாமரைகளை எடுத்து லிங்கத்திற்கு பூஜை செய்தார். இந்தசம்பவம் நடந்த இடம் மதுரையில். இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரா பௌர்ணமி அன்று இந்திரனுக்கு பூஜை உண்டு.
சித்திரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலை கிரிவலம் வருவது விசேஷமானது. பெரும் சித்தர்களும் பங்கேற்கும் இந்த கிரிவலம் பத்து கிலோமீட்டருக்கும் மேலான தூரத்தை உடையது. எனினும் மக்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரின் அருளை பெற அஞ்சுவதில்லை. பசி தூக்கம் துறந்து அவர்கள் திரள் திரளாக கிரிவலம் வருவது கண் கொள்ளா காட்சியாகும்.
மதுரையில் சித்திரை திருவிழா மே மாதம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண உத்சவம் காண கிடைக்காத வைபவம். அன்னையின் சகோதரர் திருமால் கள்ளழகராக உருவெடுத்து மதுரையில் உள்ள அழகர் கோயிலில் இருந்து சகோதரியின் திருமணத்தில் பங்கேற்க வைகை நதி வரை வருகிறார். இது சித்திரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.காலம் கடந்து அவர் வருவதால் திருமணத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
கோபம் கொண்ட கள்ளழகர் வைகை ஆற்றிலிருந்து திரும்பி போகிறார். கள்ளழகர் வைகை ஆறு இறங்குதல் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கும் விசேஷ வைபவம் ஆகும். இதை காண பக்த கோடிகள் பெருந் திரளாக கூடுவார்கள்
இன்று பிராமணர்களுக்கு,ஏழைகளுக்கு உணவு அளிப்பது நல்லது.
புனித நதியில் நீராடி நமது பாபங்களை தொலைப்பது சால சிறந்தது.
ஆக, சித்திரா பௌர்ணமி அன்று நாம் விரதமிருந்து, சித்திர குப்தரின் கணக்கை மனதில் கொண்டு ஆக்க பூர்வமான சிந்தனைகளுக்கு முதலிடம் அளித்து, பாபங்களிலிருந்து விடுபட்டு வாழ்வில் ஒளி பெறுவோமாக.
நாங்கள் ஹோமம் மற்றும் பூஜை சேவைகளை சென்னையில் சிறப்பாக செய்து தருகிறோம். எங்களின் புரோஹிதர்களின் சேவைகளுக்கு நீங்கள் எங்களை இணைய தளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply