ஜெய ஏகாதசி தை மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசி ஆகும்.
இந்த வருடம்,
ஸ்மார்த்த பக்தர்கள் ஜெய ஏகாதசியை ஜனவரி 27ம் தேதி
வைஷ்ணவ பக்தர்கள் ஜனவரி 28ம் தேதி
ஜெய ஏகாதசி அனுசரிக்கிறார்கள்.
ஏகாதசி விஷ்ணுவுக்கு உகந்த நாள் என்பது நாம் அறிந்ததே. இந்த ஜெய ஏகாதசி சிவனுக்கும் உகந்தது என்பது ஒரு அற்புதமான விஷயம்.
இதன் காரணம் ஜெய ஏகாதசி மக (தை) மாதத்தில் (வளர் பிறையில்) வருவதே ஆகும்.மக(தை) மாதம் சிவ பூஜைக்கு உகந்த நாள்.
மும்மூர்த்திகளில் இருவரை ஒரே நாளில் தொழுவது தனிச் சிறப்புதானே.
ஜெய ஏகாதசிக்கு ‘பௌமி ஏகாதசி’ என்றும், ‘பீஷ்ம ஏகாதசி’ என்றும் பெயருண்டு.
பீஷ்மப் பிதாமகர் இந்த நாளில்தான் மோக்ஷ கதி அடைந்தார்.
அன்றுதான் அவர் விஷ்ணு சஹஸ்ரநாமம் உரைத்தார்.இதனால் ஜெய ஏகாதசிக்கு ‘பீஷ்ம ஏகாதசி’ என்ற பெயர் உள்ளது.
ஒரிஸாவில் ஜெய ஏகாதசி ‘பௌமி ஏகாதசி’ என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திரன் தலைமையில் கூடிய சபையில், ஒரு கந்தர்வர் கானம் இசைக்கும் போது அவரால் தனது பணியை செவ்வனே செய்ய முடியவில்லை. அவரது மனைவி அவர் அருகே இல்லாததே காரணம்.
சினங் கொண்ட இந்திரன், அவரின் மனைவி ஒரு ராக்ஷஸியாக மாறுவாள் என சாபமிட்டார். மனமுடைந்த கந்தர்வர் வேண்டியும் இந்திரன் கோபம் தணியாமல் அவரை சபை விட்டு நீக்கினார்.
தன் இடம் திரும்பிய கந்தர்வர், தனது மனைவியை ராக்ஷஸ உருவத்தில் கண்டு மனம் பதைத்தார். அவரின் நிலை கண்ட நாரதர் அவரை ஜெய ஏகாதசி விரதம் இருக்கக் கூறினார். கந்தர்வரும் நற்பயன் பெற்றார்.
இந்த நாளில் ஏகாதசி விரதம் இருந்து பகவானை வேண்டினால் இம்மையின் பாபம் தொலைந்து மறுமை கிட்டும்.
ஜெய ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் பூஜை செய்து நற்பலன் பெறுவோம். இந்த நாளில் சிவனையும் பூஜிப்போம்.
ஜெய ஏகாதசியை பற்றி பத்ம புராணத்திலும், பவிஷ்யோத்திர புராணத்திலும் கூறப்பட்டு உள்ளது.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply