நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி | Ama Vedic Services
செப்டம்பர் 04, 2017 06:41 முப

நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி

இந்திரா ஏகாதசி,செப்டம்பர் 16, 2017

 

இந்திரா ஏகாதசி ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசியாகும். இது மஹாலய பக்ஷத்தில் அமைவதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு.இந்த ஏகாதசி விரதம் நம் பாபங்களை போக்குவதோடு நம் முன்னோர்களின் பாபங்களையும் போக்குவதாக அமைகிறது. இந்த நாளில் தர்ப்பணம் செய்வது விசேஷம் என்பதால் இதனை ஏகாதசி ஸ்ராத்தம் என்றும் அழைக்கிறார்கள்.

 

இந்திரா ஏகாதசி விரத கதை

 

முன்பொரு காலத்தில் மகிஷ்மதிபுரி ராஜ்யத்தை இந்திரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.அவரது ஆட்சியில் மக்கள் குறை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மன்னர் சிறந்த விஷ்ணு பக்தரும் கூட. விஷ்ணுவை போற்றி வணங்குவதில் சிரத்தை உள்ளவர்.

 

ஒரு நாள் மன்னர் தர்பாரில் இருந்த போது அங்கு  நாரத முனிவர் வந்தார். அவரை சகல மரியாதையுடன் வணங்கிய மன்னர் அவர் வந்த காரணம் வினவினார். நாரதர் தான் வந்த காரணத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

 

நாரதர் பிரம்மலோகத்தில் இருந்து யமலோகத்திற்கு இறங்கிய போது யமராஜரால் வரவேற்கப்பட்டார். அவரின் சபையில் சகல மரியாதைகளுடன் அமர்ந்திருந்த போது சபையினருக்கு நடுவே இந்திரசேனரின் தந்தையும் இருக்கக் கண்டார். ஆச்சர்யப்பட்ட நாரதரிடம் இந்திரசேனரின் தந்தை தான் ஒரு ஏகாதசி விரதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முறித்ததன் விளைவாக தான் நரகத்தில் அல்லல்படுவதாக உரைத்தார்.

 

இந்திரசேனரின் தந்தை இந்திரசேனரை இந்திரா ஏகாதசி விரதம் இருக்குமாறு நாரதர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனால் தான் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டம் சேர முடியுமென உரைத்தார். அவர் கூறியதை இந்திரசேன மன்னரிடம் கூறவே நாரதர் மன்னரை நாடி வந்துள்ளார்.

 

இதனை அறிந்தவுடன் நாரதரிடம் மன்னர் இந்திரா ஏகாதசி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி தனது சுற்றத்தோடும், ஏனையரோடும் விரதமிருந்து தனது தந்தைக்கு நல்வழி காட்டினார். தனது தந்தை கருட வாகனம் ஏறி வைகுண்டம் செல்வதை கண்டார். அவர் த்வாதசி அன்று விரதம் முடிக்கும் போது அவரது பக்தியை மெச்சி  அவர் மீது ஆகாயத்திலிருந்து பூமாரி பெய்தது. மன்னரும் பிற்காலத்தில் வைகுண்டம் சேர்ந்தார்.

 

இந்திரா ஏகாதசி விரத முறை

 

இந்திரா ஏகாதசி விரத நியதிகள் மற்ற ஏகாதசி விரதம் போன்றதே. 

 

ஏகாதசி அன்று அதிகாலை விஷ்ணுவை வணங்கி, பூஜைகள் செய்து  பிறகு, மதியம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 

தானியத்தினால் செய்யப்படாத பிரசாதங்களை பிராமணர்களுக்கு  கொடுத்து முடிந்த தானம் வழங்க வேண்டும்.

 

இரவு கண் முழித்து பகவான் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.

 

இந்திரா ஏகாதசியின் விரத பலன்கள்

 

இந்திரா ஏகாதசியில் முறைப்படி  விரதமிருந்தால் நமது  பாபம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாபங்களும் நீங்கும்.

 

நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.

 

இந்த ஏகாதசி விரத கதை கேட்போருக்கு குதிரையை தானம் செய்த பலன் கிடைக்கும்.

 

இதனை படிப்போருக்கும் கேட்போருக்கும் வாழ்வில் வளமும்,முக்தியும் கிடைக்கும்.

 

இத்தனை நன்மை பயக்கும் இந்திரா  ஏகாதசி விரதத்தை கடைபிடித்து நம் வாழ்வை வளப்படுத்தி ,நம் முன்னோர்கள் உய்யவும் வழி தேடுவோமே? 

 

 நாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் . மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு  கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    2 + 4 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Currently, there is no weather information available.

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK