நவராத்திரியின் முக்கியத்துவம் | Ama Vedic Services
செப்டம்பர் 19, 2017 06:21 பிப

நவராத்திரியின் முக்கியத்துவம்

நவராத்திரி இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த பண்டிகையை துர்கையையும் ராமரையும் போற்றும் வகையில் கொண்டாடுகிறார்கள்.

 

நவராத்திரியை வருடத்தில் நான்கு முறை கொண்டாடுகிறார்கள். இவற்றுள் சரத் நவராத்திரி எனப்படும் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது.

 

இதற்கடுத்து வசந்த் நவராத்திரி பிரசித்தி உடையது. மற்ற இரண்டு நவராத்திரிகள் மகத் நவராத்திரி மற்றும் ஆஷாட  நவராத்திரி ஆகும்.

 

நவராத்திரி என்றால் என்ன?

 

வட மொழியில் ‘நவ’ என்றால் ஒன்பது  என்று அர்த்தம். ராத்திரி என்றால் இரவு எனப் பொருள். ஒன்பது  இரவுகளுக்கு அம்பிகையையும் ,சில இடங்களில் ராமரையும் ஆராதிப்பதற்கே நவராத்திரி எனப் பெயர்.

 

வடகிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில்  துர்க்கை அம்மனை நவராத்திரியின் போது வழிபடுகிறார்கள். மகிஷாசுரனை  விஜயதசமி அன்று வதம் செய்து, அன்னை சக்தி  வெற்றியின் வடிவமாகத் திகழ்வதை ஆராதிக்கிறார்கள். 

 

வட மாநிலங்களிலும் ,மேற்கு மாநிலங்களிலும் நவராத்திரி ராம்லீலாவாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று ராமர் ராவணனை அழித்து வெற்றித் திரு உருவமாகத் திகழ்வதை கொண்டாடுகிறார்கள். இவ்வாறாக நன்மைக்கும், தீமைக்கும் நடக்கும் போராட்டம். இதில் நன்மை தீமையை வெல்லும் என்ற உண்மையை மகிஷாசுர வதமும், ராவண வதமும் உணர்த்துகின்றன.

 

நவராத்திரி பூஜை செய்வதன் பலன்கள்

 

நவராத்திரியின் போது அன்னை சக்தியை துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய வடிவங்களில் வணங்குகிறோம். நவராத்திரி பூஜை செய்தால் மனோ பலம்,ஆத்ம சக்தி பெருகும்.  தீ வினைகள் நீங்கி  நன்மை கிடைக்கும்.

 

நவராத்திரி  மகிஷாசுர வதத்தைக் குறிக்கிறது. மகிஷம் என்றால் எருமை.மகிஷாசுரனில் இருக்கும் மகிஷம் என்ற சொல்  நம்முள் இருக்கும் தீய எண்ணங்களை குறிக்கிறது.  அதனை அழிப்பதன் மூலம் அன்னை சக்தி நம்முள் இருக்கும் தீமையை ஒடுக்குகிறாள். அதனால் நவராத்திரியின் போது  சக்தியை வணங்கி அன்னையின் அருள் பெற வேண்டியது அவசியம்.

 

நவராத்திரியில் தேவியின் ஒன்பது அலங்காரங்கள்

 

 Navratri 2017

 

நவராத்திரியின் போது அன்னை சக்தியை ஒன்பது வடிவங்களில் அலங்கரித்து, அதற்கேற்ற மாதிரி பிரத்யேகமான நெய்வேத்யங்கள் அளித்து அன்னையின் அருளுக்கு பாத்திரமாகிறோம்.

 

முதல் நாள் - சாமுண்டி

 

முதல் நாள் அலங்காரம் சாமுண்டி ஆகும். முண்டனை அழித்த அவதாரம். தெத்துப் பற்கள்  கொண்டவள். தர்மத்தை காக்கவும், தீமையை அழிக்கவும் அவதரித்தவள். அதனால் கோபமாக காட்சி அளிப்பவள்.

 

இரண்டாம் நாள் - வராஹி

 

இரண்டாம் நாள் அலங்காரத்தில்  அன்னை   வராஹியாகக் காட்சி தருகிறாள்.வராஹ முகமும், தெத்துப் பற்களும் கொண்டவள். சூலம் தரித்தவள் . பெரிய உருவமுடையவள். பெரிய சக்கரத்தை ஏந்தியவள். தனது பற்களால் பூமியை தாங்கி இருப்பவள். தண்டினி, பகளாமுகி, மங்களமய நாராயணி ஆகியவை வராஹியின் மற்ற பெயர்களாகும். வராஹி  சக்தியின் சேனாதிபதியாவாள். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றை விரட்ட வல்லவள்.

 

மூன்றாம் நாள் - இந்திராணி

 

மூன்றாம் நாள் இந்திராணி வடிவம். இந்திராணி இந்திரனின் சக்தியை கொண்டவள். மாஹேந்திரி, சாம்ராஜ்யதாயினி என்ற பெயர்களும் இந்த அம்மனுக்கு உண்டு. வஜ்ராயுதமும், கிரீடமும் தரித்தவள். ஆயிரம் கண்ணுடையவள். யானையின் பலம் படைத்தவள். விருத்தாசுரனை வதம் செய்தவள். நல்ல வேலை மற்றும் சம்பள உயர்வு வேண்டுவோர் இந்திராணியை வேண்டுவது அவசியம்.

 

நான்காவது நாள் - வைஷ்ணவி தேவி

 

நான்காவது நாள் அம்பாளை வைஷ்ணவி தேவியாகவழிபடுகிறோம்.இன்று அன்னை சங்கு,சக்ரம்,வில் ,கதை ஏந்தி காட்சி அளிக்கிறாள்.கருட வாகனம் கொண்டுள்ளாள்.தீய சக்திகளை அழிப்பவள்.

 

ஐந்தாவது நாள் - மகேஸ்வரி தேவி

 

ஐந்தாவது நாள் அன்னை மகேஸ்வரி தேவியாக காட்சி அளிக்கிறாள்.மகேஸ்வரனின் சக்தி வடிவமானவள்.ரிஷப வாகனம் கொண்டு ஆபரணங்களாக பாம்பும்,பிறை நிலவும்,திரிசூலமும் தரித்தவள்.தர்மத்தின் இருப்பிடம்.பெரிய சரீரம் கொண்டவள்.கடினமான உழைப்பை உடையவர்கள் தங்கள் உழைப்பின் முழு பலனை பெற அன்னையை வேண்ட வேண்டும்.  

 

ஆறாவது நாள் - கௌமாரி

 

ஆறாவது நாள் அன்னை கௌமாரியாக காட்சி அளிக்கிறாள்.இவளின் வாகனம் மயில் மற்றும் கொடி சேவலாகும்.முருகப் பெருமானின் வீரத்திற்கு அடிப்படையானவள்.நமக்கு வீரத்தினை அருளுபவள்.ஓங்கார ஸ்வரூபி. பாபங்களைப் போக்கிடுபவள்.

 

ஏழாவது நாள் - மகாலக்ஷ்மி

 

ஏழாவது நாள் அன்னை மகாலக்ஷ்மியாக தரிசனம் தருகிறாள். சங்கு,கதை, அம்பு வில்,கேடயம்.சூலம்,சக்கரம்,ஜபமாலை,மணி,தாமரை,கமண்டலம் ஆகியவை தரித்தவள்.  விஷ்ணுவின் மனைவி.பவளத்தை ஒத்த நிறமுடையவள்.செந்தாமரையை இருக்கையாகக் கொண்டவள்.எல்லா செல்வங்களையும் தருபவள்.

 

எட்டாவது நாள் - நரசிம்ஹி

 

இன்று அன்னை நரசிம்ஹியாகத் தெரிகிறாள்.சிம்மத்தின்  தலையையும் மனித உடலும் கொண்டவள்.கூரிய நகங்கள் படைத்தவள்.சிம்மத்தை வாகனமாகக் கொண்டவள்.நரசிம்ஹியை வழிபட்டால் நாம் எதிரிகளின் தொந்தரவிலிருந்து  விடுபடலாம்.

 

ஒன்பதாவது நாள் - ப்ராஹ்மி

 

ஒன்பதாவது நாள் நவராத்திரியின் இறுதி நாள்.இன்று அன்னை ப்ராஹ்மியாக ,அதாவது,சரஸ்வதியாக தோற்றம் அளிக்கிறாள். அன்னத்தை வாகனமாகக் கொண்டவள்.ஞானத்தின் இருப்பிடம்.  கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதியை பணிவது அவசியம்.

 

இப்படி அன்னை சக்தியை ஒன்பது நாட்களும் ஒன்பது  அலங்காரங்களில்  தரிசித்து, நெய்வேத்யங்கள் அளித்து, அன்னையின் அருளை பெறுவோமாக! .

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    1 + 1 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Currently, there is no weather information available.

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK