புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிக்கு பாபங்குச ஏகாதசி எனப் பெயர். இந்த ஏகாதசி விரதம் இரு விதமான நன்மைகளை தர வல்லது. ஒன்று முக்தியாகும். மற்றொன்று இந்த உலக வாழ்வில் சுகமும் வளமும் ஆகும்.
பாபங்குச ஏகாதசி அன்று பாம்பணையில் சயனித்திருக்கும் பத்மநாப சுவாமியை வணங்க வேண்டும்.
பாபங்குச ஏகாதசி விரத மகிமை
· பாபங்குச ஏகாதசி விரதமிருந்தால் இவ்வுலகில் விரும்பிய வண்ணம் சுகமாக வாழலாம்.உலக வாழ்விற்கு பின் மோக்ஷ பதவியும் அடையலாம்.
· ஆயிரம் யானைகளை தானம் கொடுப்பதன் மற்றும் நூறு .ராஜசூய யாகங்கள் செய்த பலன் பாபங்குச ஏகாதசி விரத பலனின் 1/16 அளவே ஆகும்.
· இந்த ஏகாதசி விரதமிருந்தால் செல்வம், தான்யம், அழகிய மங்கையர்,ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும்.
· பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் மோக்ஷ பதம் அடைவது மட்டுமன்றி தாய் வழியிலும், தந்தை வழியிலும், மனைவியின் வழியிலும் 10 தலைமுறைகளுக்கு முக்தியை தேடித் தருகிறார்கள்.
· தங்களது பாப சுமையிலிருந்து விடுபட்டு நரகத்திற்கு செல்வதிலிருந்து விடுபடுகிறார்கள்.
· இன்றைய தினம் குடை, தண்ணீர், தங்கம் ,பசு, செருப்பு , தானியம், எள், நிலம் ஆகியவற்றை தானம் அளித்தால் யமராஜரை எண்ணி பயப்பட வேண்டியதில்லை.
· பாபங்குச ஏகாதசி விரதமிருந்தால் எல்லா புனித ஸ்தலங்களுக்கும் சென்று வந்த பலன் கிட்டும்.
· இந்த விரதத்தை பால்யத்திலோ,இளமைப் பருவத்திலோ அல்லது முதுமையிலோ கடைப்பிடித்தால் பாபத்தின் விளைவுகள் நீங்கப் பெற்று முக்தி அடைவர்.
· பத்மநாப சுவாமிக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த ஏகாதசி விசேஷமாக கருதப்படுகிறது.
இவ்வாறாக பாபங்குச ஏகாதசி விரத பலனை தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துக் கூறினார்.
நாமும் பாபங்குச ஏகாதசி விரதமிருந்து இக பர சுகம் பெறுவோமே.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply