தைப்பூசம் முருக வேளுக்கு மிகவும் உகந்த நாள்.
தைப்பூசம் தை மாதத்தில் பௌர்ணமி அன்று பூச நட்சத்திரம் வரும் வேளையில் கொண்டாடப்படுகிறது.
‘தைப்பூசம்’ என்ற பெயரிலேயே தை மாதமும், பூச நக்ஷத்திரமும் அடங்கி உள்ளன.
இந்த வருடம், தைப்பூசம் ஜனவரி 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் அன்று அன்னை பார்வதி கந்தனுக்கு சூர பத்மனை அழிக்கும் பொருட்டு வேலினை ஆயுதமாக வழங்கினார்.அந்த வேல் அசுரனை அழிக்கும் ஆயுதம் மட்டுமன்று. நம் மனக் கெடுதல்களையும் அழிக்க வல்லது.
நம்முள் உள்ள தீயதை நீக்கி, நல்லதை வேண்டி தைப்பூசமன்று கந்தக் கடவுளை வணங்குகிறோம்.
நமக்கு மனக் கட்டுப்பாட்டை வழங்க முருகனை வேண்டும் நாள் இது.
பூச நக்ஷத்திரம் நமது ஆழ்ந்த அறிவைக் குறிப்பது.தை பூசத்தன்று கந்தக் கடவுளை வணங்குவதன் மூலம் நாம் நமது ஆன்மீக அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.
இந்த நாளில் சிவ பெருமானும் பூமிக்கு வந்து மக்களின் கர்ம வினை அகன்று ஞானம் பிறக்க அருளியதாக ஒரு செய்தி உண்டு.
தைப்பூசம் அன்று முருகனுக்கு விசேஷ பூஜைகளும், அர்ச்சனைகளும் முருகர் கோவில்களில் உண்டு.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களையும்,பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் நாள் இது. பழனிக்கு பால் குடம் எடுப்பார்கள்; பாத யாத்திரை செல்வார்கள்; காவடி எடுப்பதும் உண்டு.
தைப்பூசத்திற்குத் திருச்செந்தூர் சென்று வழிபடுபவர்கள் ஏராளம். .
தமிழ் நாட்டிலும், மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த நாளை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூசம் அன்று முருகனை வழிபட்டு, ஆன்மீக ஞானம் பெறுவோமாக!
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply