ரமா ஏகாதசி விரத கதை | Ama Vedic Services
அக்டோபர் 12, 2017 05:31 பிப

ரமா ஏகாதசி விரத கதை

 

ரமா ஏகாதசி, அக்டோபர் 15, 2017

 

ரமா ஏகாதசி ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷத்தில் (அக்டோபர் - நவம்பர்) வருகிறது. ரமா ஏகாதசி விரதம் இருந்தால் விரதமிருப்பவரின் எல்லா பாபங்களும் பறந்தோடும்.

 

இந்த ஏகாதசியின் பெருமையை பிரம்ம வைவத்ர புராணத்தில் தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கிறார். இந்த ஏகாதசியின் மகிமையை கூறும் கதையை நாம் இப்போது காண்போம்.

 

Srimad Bhagavatam

 

ரமா ஏகாதசி விரத கதை

 

முன்பொரு காலத்தில் முசுகுந்தர் என்ற ஒரு அரசர் இருந்தார். அவர் இந்திரன், வருணன், விபீஷணன், யமதர்மன் ஆகியோரோடு நட்புறவு கொண்டு இருந்தார்.  முசுகுந்தர்  பகவான் விஷ்ணுவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஏகாதசி விரதமிருப்பதை தனது முக்கிய கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

 

rama ekadashi

 

முசுகுந்தருக்கு சந்திரபாகா என்றொரு மகளுண்டு. பிரசித்தி பெற்ற புனித நதியாம் சந்திரபாகாவின் பெயரை பின்பற்றி முசுகுந்தர் தனது மகளுக்கு அதே பெயரை வைத்தார். அவளை சந்திரசேனரின் மகனாம் ஷோபனா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஷோபனா உடல் நலம் குன்றியவர்.

 

ஒரு நாள் முசுகுந்தரின் மாளிகைக்கு ஷோபனா தனது  மனைவியுடன்  விஜயம் செய்தார். அது ஒரு தசமி.  மறு நாள் ரமா ஏகாதசி.  முசுகுந்தர் தனது மாளிகையில் ஏகாதசி விரதத்தை ஒரு கட்டாயமான வழக்கமாக ஆக்கி இருந்தார்.  அன்று விலங்குகளுக்கு கூட உணவும்,  நீரும் அளிப்பதில்லை.

 

முசுகுந்தர் ஏகாதசி விரதமிருப்பதை அவ்வளவு  உறுதியாகக் கடைப்பிடித்தார். தசமி அன்று அதற்கு  மறு நாள் ஏகாதசி என்றும்,  ஏகாதசி அன்று அனைவரும் விரதமிருக்க வேண்டும் என்றும் முரசு கொட்டி  அறிவிப்பார்.

 

இத்தகைய நாள் ஒன்றில் தான் ஷோபனா தனது  மனைவியுடன் முசுகுந்தரின் மாளிகைக்கு வந்தார். முரசொலி கேட்டவுடன் அவர் கவலை கொண்டார்.  அவரோ உடல் நலம் குறைந்தவர்.  அவர் எவ்வாறு ஏகாதசி விரதம் இருப்பார்? ஆனால் வேறு வழி இல்லை.  தனது மாமனாரை திருப்திப்படுத்த ஷோபனா ஏகாதசி விரதமிருந்தார்.  அது ரமா ஏகாதசி ஆகும். 

 

இரவும் வந்தது. அந்த இரவில் ஷோபனாவும் மற்றவர்களோடு  கண் விழித்து இருந்தார். அனைவரும்  ஹரி நாமம் சொல்லி பஜனை செய்தனர். அந்தே பரிதாபம்! ஏகாதசி விரதமிருந்ததன் விளைவாக பசியும் தாகமும் மிகுந்து, அந்த இரவில்  சோபனா தனது உயிர் இழந்தார்.

 

முசுகுந்தர் அவருக்கான ஈமக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்தார். தனது மகள் சந்திரபாகா தனது கணவனோடு உடன்கட்டை ஏறக் கூடாதென தடுத்த முசுகுந்தர் அவளை தன்னோடு தங்கி இருக்கப் பணித்தார். சந்திரபாகா முசுகுந்தரின் மாளிகையில் வசித்து வந்தாள். வழக்கம் போல் ஏகாதசி விரதமிருந்து அதன் பலன்களைப் பெற்றாள்.

 

ஷோபனா தனது இறப்பிற்குப் பிறகு மந்திராச்சல  மலையின் மேல் இருக்கும்  ஒரு  அழகான, பொலிவான ராஜ்யத்தை ஆளும் பாக்யம்  பெற்றார். அவரது மாளிகையில் அனைத்து இடங்களும் விசேஷமான ரத்தினங்களால் நிரப்பப்பட்டு இருந்தன. அவரது கிரீடமும் சிம்மாசனமும் விலை மதிக்க முடியாத ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவருக்கு அப்சரசுகளும், கந்தர்வர்களும் பணிவிடை செய்தனர். அவர் இந்திரனுக்கு ஒப்பான பொலிவு பெற்றிருந்தார்.

 

ஆனால் இந்த பொலிவும் அழகும் நிலையான  தன்மை இல்லாதவை. இதற்கு காரணம் ஷோபனா நம்பிக்கை இல்லாமல் ரமா ஏகாதசி விரதம்  அனுசரித்ததே ஆகும். அவர்  ரமா ஏகாதசி விரதமிருந்ததன் பலனாக இந்த அழகிய ராஜ்யத்தை அரசாளும் பாக்கியம் பெற்றார். ஆனால், நம்பிக்கை இல்லாமல் விரதமிருந்த காரணத்தால் அவரது ராஜியம் நிலையான தன்மை பெறவில்லை.  

 

முசுகுந்தரின் ராஜியத்தில் சோமஷர்மா என்றொரு அந்தணர் உண்டு. அவர் ஒரு சமயம் பல புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அவ்வாறு அவர் இடம் இடமாக சென்ற போது ஷோபனாவின் ராஜியத்தைக் கண்டார். ஷோபனாவை முசுகுந்தரின் மருமகன் என அடையாளம் கண்டு கொண்ட சோமஷர்மா அவரின் ராஜியத்தின் அழகைப் பாராட்டினார். அவரிடம் தனக்கு அந்த ராஜியம் ரமா ஏகாதசி விரத பலனாகக் கிடைத்தது என தெரிவித்த ஷோபனா அந்த ராஜியம் நிலையற்றது  என்பதையும் கூறினார். தான் நம்பிக்கை இல்லாமல் ஏகாதசி விரதம் இருந்ததே இதற்கு காரணம் எனவும் கூறினார்.

 

ஷோபனா  சோமஷர்மாவிடம்  சந்திரபாகாவிடம் சென்று தனது ராஜியத்தைப்  பற்றி எடுத்துக் கூறுமாறு வேண்டினார். அவரும் சந்திரபாகாவிடம் சென்று ஷோபனா கூறியதை உரைத்தார். சந்திரபாகா தனது ஏகாதசி விரத பலன் கொண்டு ஷோபனாவின் ராஜியத்தை நிலையானதாக ஆக்க முடியும் என்றார்.

 

சோமஷர்மாவுடன் சந்திரபாகா  மந்திராச்சல மலையை நோக்கி புறப்பட்டாள். அந்த மலையின் அடிவாரத்தில் இருந்த வாமதேவ முனிவரின் ஆஷ்ரமத்தை கண்டு, அங்கு சென்று சந்திரபாகா முனிவரை வணங்கினாள். அவளின் நிலையைக் கேட்டறிந்த முனிவர், சில விசேஷ சடங்குகள் செய்து, அவளின் மேல் புனித நீரைத் தெளித்தார். சந்திரபாகா சாதாரண மானுடத்தன்மை நீங்கி அமரத்துவம் பெற்றாள்.

 

மந்திராச்சல மலையில் தனது மனைவியை கண்ட ஷோபனா மிகுந்த சந்தோஷமடைந்தார்.அவளிடம் தனது நிலையை எடுத்துக் கூறினார். சந்திரபாகா தனது ஏகாதசி விரத பலனை ஷோபனாவிற்கு தந்து விடுவதாகக்  கூறினாள். அந்த பலனின் மூலம் ஷோபனா தனது  ராஜியத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம் எனக் கூறினாள். குழந்தைப் பருவத்திலிருந்து தான் ஏகாதசி விரதமிருப்பதால் அந்த விரத பலன் ஷோபனாவிற்கு கண்டிப்பாகப் பயன்படும் என உரைத்தாள். அதன்படியே அவளின் விரத பலனை வாங்கி ஷோபனா தனது  ராஜியத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

 

ரமா ஏகாதசி விரத பலன்கள்

 

ரமா ஏகாதசி விரதமிருந்தால் பாபங்களில் இருந்து விடுபடலாம்.

 

வாழ்வின் தடைக்கற்களை வெற்றி கொள்ளலாம்.

 

ஏகாதசி விரதம் இருந்தால் ஒரு பிராமணனை கொல்லுதல் போன்ற கொடிய பாபங்களில் இருந்து விடுதலை பெறலாம்.

 

ரமா ஏகாதசி விரதமிருந்து நாமும் நம் பாபங்களில் இருந்து விடுபடலாம்.

 

 

   

 

 

 

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    6 + 1 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Currently, there is no weather information available.

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK