வருதினி ஏகாதசி சித்திரை மாதத்து தேய் பிறை ஏகாதசி ஆகும். இது ஏகாதசிகளில் உத்தமமான ஒன்றாக கருதப்படுகிறது. வருதினி ஏகாதசி விரதமிருப்பவர்களின் அபிலாஷைகள் நிறைவேறுவதோடு வீடுபேறும் அடைகிறார்கள்.
பவிஷ்ய புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு வருதினி ஏகாதசியின் சிறப்பை எடுத்து சொல்லுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 12, 2018 வியாழக்கிழமை அன்று வரும் வருதினி ஏகாதசியில், தசாவதாரத்தில் ஒன்றான வாமனாவதார திருமாலை வணங்குகிறோம்
வருதினி என்றால் ‘காப்பது’ என வட மொழியில் பொருள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் நோயிலிருந்து, வறுமையிலிருந்து, பாபத்திலிருந்து காக்கப்படுகிறார்கள். மீண்டும் பிறவி எடுக்கும் பிணியிலிருந்து விடுபடுகிறார்கள்.
இந்த நாளில் விரதமிருந்தால் கொடிய, நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஒரு அபாக்யவதி பாக்கியம் பெறுவாள்.
விலங்குகள் மறு ஜென்மம் எடுக்கும் பிணியிலிருந்து விடுபடும்.
வருதினி ஏகாதசி விரதம் இருந்தே மந்தத அரசர் முக்தி பெற்றார். இக்ஷ்வாகு வம்சத்தை சேர்ந்த துந்துமாரர் சிவபெருமானின் சாபத்தால் ஏற்பட்ட கொடிய தொழு நோயிலிருந்து விடுதலை பெற்றார்.
HANDPICKED RELATED CONTENT:
ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும் |
மந்தத அரசரின் கதை
மந்தத அரசர் ராஜ்யத்தை நன்முறையில் பரிபாலித்த ஒழுக்க சீலர். அவர் யாதவ ராஜா ஷா பிந்துவின் மகள் பிந்துமதியை திருமணம் செய்தார். அவர்களுக்கு முசுகுந்தர், அம்பரிஷர், புருகுத்சர் என மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களது 50 பெண்களை ஸௌபரி மகரிஷிக்கு திருமணம் செய்வித்தனர்.
மந்தத அரசர் ஒரு நாள் காட்டில் தவம் புரிந்துகொண்டு இருந்தார். அப்போது ஒரு கரடி அங்கு வந்து அவர் காலை கடிக்க ஆரம்பித்தது. தவத்தை கலைக்காத அரசரை காட்டிற்குள் இழுத்து சென்றது. அரசரும் மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் அந்த இடத்தில் தோன்றி கரடியை தனது சக்கரத்தால் கொன்றார்.
இழந்த காலை திரும்ப பெற வேண்டி நின்ற மந்தத அரசரை ஸ்ரீமன் நாராயணன் வருதினி ஏகாதசி அன்று மதுரா சென்று மகாவிஷ்ணுவை ஆராதித்து விரதம் இருக்குமாறு பணித்தார். அரசரும் அப்படியே செய்து இழந்த காலை பெற்றார்.
வருதினி ஏகாதசி விரதமிருப்போருக்கு பல வகையான தானங்கள் செய்த பலன் உண்டு. என்ன வகையான தானங்கள் தெரியுமா?
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த பலனை இந்த ஏகாதசி விரதம் அளிக்கிறது.
சூரிய கிரகணம் அன்று கை நிறைய தங்கம் தானம் செய்த பலனுக்கு ஒப்பானது.
குதிரைகளை தானம் அளிப்பதை விட யானைகளை அளிப்பது மேலானது. அதை விட மேலானது நிலத்தை தானமாக வழங்குவது. பூமி தானத்தை விட எள் தானம் சிறந்தது, அதை விட தங்கம் மேலானது. தங்கத்திலும் சிறந்தது அன்னதானம். அதை விட சிறந்தது ஞானத்தை பிறருடன் பகிர்ந்து கொள்வது. வருதினி ஏகாதசி விரதம் இந்த அத்தனை தான பலன்களையும் அளிக்க வல்லது.
கன்யாதானம் இவை எல்லாவற்றையும் விட சிறப்பு மிக்கது. அந்த பலன் வருதினி ஏகாதசி விரதம் மூலம் நமக்கு கிட்டும்.
வருதினி ஏகாதசியின் சிறப்பை கேட்போருக்கும், படிப்போருக்கும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் உண்டு.
HANDPICKED RELATED CONTENT:
|
வருதினி ஏகாதசி விரத விதிகள்
வருதினி ஏகாதசி விரத முறை எல்லா ஏகாதசி விரதம் போன்றதே. .
இந்த ஏகாதசி அன்று மைசூர்பருப்பு, உளுந்து, அசைவம், தேன், வெற்றிலை, பாக்கு, கொண்டை கடலை, கீரை ஆகியவை உண்ணக் கூடாது.
சூதாட்டம், தூக்கம், கோபம், திருட்டு, சவரம் செய்தல், எண்ணெய் தேய்த்தல், திட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது.
பாக்கினால் செய்யப்பட்ட பாத்திரங்களை உபயோகப்படுத்தக் கூடாது.
வீட்டில்தான் உணவு உண்ண வேண்டும். வெளி உணவு உண்ணக் கூடாது.
இரவு முழுவதும் கண் முழித்தால் வீடு பேறு உறுதி.
பகவத் கீதை ,விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றை படிப்பதனால் மேலும் நற்பலன்கள் பெறுவது உறுதி.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply