மகா சிவராத்திரி அன்று நாலு ஜாம அபிஷேகம் நடப்பது நாம் அறிந்ததே. அந்த அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் என்ன, பலன் என்ன? தெரியுமா உங்களுக்கு?
இந்த காலத்தில் அன்ன உருவெடுத்து சிவனின் மேல் பாகத்தை பிரம்மா தேடிய போது செய்த பூஜையாகும்.
அபிஷேக பொருள் : பசும் பால்,தயிர்,நெய்,கோமியம்,கோசாணம்(பஞ்ச கவ்யம்)
வஸ்திரம்: மஞ்சள்பட்டு
அர்ச்சனை: தாமரை மலர்
நெய்வேத்யம்: பச்சை பயரால் ஆன பொங்கல்
தீபம்: நெய்
பலன்: பிறவித் துன்பம் நீங்கும்.
இந்த காலத்தில் மஹா விஷ்ணு வராக உருவமெடுத்து சிவனின் அடியைத் தேடிய போது செய்த பூஜை காலம்.
அபிஷேக பொருள் : பஞ்சாம்ருதம்
வஸ்திரம்:வெண்பட்டு
அர்ச்சனை: தங்க நாணயங்கள்
நெய்வேத்யம்:இனிப்பு பாயாசம்
தீபம்: நல்லெண்ணெய்
சந்தனக்காப்பு இந்த காலத்தின் சிறப்பு
பலன்: உடல் வளம்,ஐஸ்வர்யம்,விஷ்ணு கடாக்ஷம்
அம்பாள் சிவனை பூஜிக்கும் காலம் இது.இதனை லிங்கோத்பவர் காலமென்றும் சொல்வர்.(பிரம்மாவும் விஷ்ணுவும் சிவலிங்கத்தின் முதலும் முடிவும் தேடி சிவனை பூஜித்த நேரமிது)
அபிஷேக பொருள் : தேன்
வஸ்திரம்: சிவப்பு துணி
அர்ச்சனை: ஜாதி மல்லி
நெய்வேத்யம்: கல்கண்டு சாதம்
தீபம்: நெய்
பச்சை கர்ப்பூரமும் வில்வ இலைகளும் கொண்டு அலங்காரம்.
பலன்: தீய சக்திகள் அண்டாது
சகல ஜீவராசிகளும் சிவனைத் துதிக்கும் காலமிது.
அபிஷேக பொருள் : கரும்புச் சாறு,பால்
குங்கும பூ கொண்டு அலங்காரம்
அர்ச்சனை: நந்தியாவட்டைமலர்
சிறப்பு அலங்காரம்,பூஜை,தூப,தீபம்
நான்கு ஜாம அபிஷேகம் பார்த்தால் இம்மையில் நன்மையே!
மகாசிவராத்திரி அன்று கண்முழித்து சிவனை வழிபடுவது நாம் அறிந்ததே. சிவன் கோவில்களை ஓடி ஓடி தொழுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமா?
இந்த செய்தி உங்களுக்காக இதோ - குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் - 12 சிவன்கோவில்களை
பக்தர்கள் தொடர்ந்து ஓடி சிவ வழிபாடு செய்வார்கள்
குமரி மாவட்டத்தில், கல்குளம் விளவங்கோடு தாலுக்காவில் 12 கோயில்களை தொடர்ந்து ஓடி சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். மகா சிவராத்திரிக்கு முந்திய தினம் மதியம் இந்த ஓட்டம் ஆரம்பமாகும். கோயில்களின் பெயர்கள் என்ன தெரியுமா?
முஞ்சிறைஅருகே உள்ள திருமலை மகாதேவர் கோயில் ஆரம்பம்.அடுத்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்றியோடு ஆகியவற்றோடு திருநட்டாலத்தில் உள்ள சங்கரநாராயணர் கோயிலில் முடிவடைகிறது. “சிவனும், ஹரியும் ஒன்று” என்பதைப் புலப்புடுத்தும் விதமாக அமைந்துள்ளது.
பக்தர்கள் கையில் திருநீறு விசிறி ஆகியவற்றோடு, சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டு, சங்கர ,நாராயண நாமாக்களை சொல்லிக்கொண்டு கோயில்களை ஓடி ஓடி வழிபடுகிறார்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply