அக்னி நக்ஷத்திரம் வேளையில் சூரியன், பரணி மூன்றாம் நாலாம் பாதங்கள், கார்த்திகை நாலு பாதங்கள், ரோகிணி முதல் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் சஞ்சாரம் செய்கிறார்.
கார்த்திகை கார்த்திகை பெண்களின் நக்ஷத்திரம். கார்த்திகை பெண்கள் சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்கள். அறுவரும் ஒரு நக்ஷத்திர கூட்டமாக வானில் ஒளிருபவர்கள்.
கார்த்திகை நக்ஷத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவானாகும். இதனால் கார்த்திகை நக்ஷத்திரத்திற்கு அக்னி நக்ஷத்திரம் எனப் பெயருண்டு. இந்த நக்ஷத்திரத்தை சூரியன் கடக்கும் நேரம் வெயில் அதிகமாகவும், வெப்பமாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன?
கார்த்திகை நக்ஷத்திரம் முருகனுக்கு உகந்தது. அக்னி நக்ஷத்திர பொழுதில் முருகனை வணங்குவது உசிதம். பக்தர்கள் தீர்த்தங்களில் நீர் சேகரித்து முருகனுக்கு அபிஷேக நீராக கோவில்களுக்கு கொண்டு செல்வார்கள். இந்த நீரை சேகரித்து கொண்டு காவடி எடுத்து முருக ஸ்தலங்களுக்கு செல்வது வழக்கம்.அந்த அபிஷேக நீரை பிரசாதமாக பெறுவார்கள்.
முருகன் ஞான காரகன். வெம்மை தணிக்க நீர் சேகரித்து நமது கர்மங்களை தொலைத்து அந்த ஞான காரகனின் அருள் வேண்டுவது முறை தானே?
அக்னி நக்ஷத்திர வேளை சுப காரியங்களுக்கு உகந்தது அல்ல. பரணி நக்ஷத்திரத்தின் அதி தேவதை எமன். வெயிலின் கொடுமையும் மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விஷயம் அல்ல. இந்த காரணங்களால் அக்னி நக்ஷத்திரத்தின் போது சுப காரியங்கள் நடத்துவது இல்லை.
Leave a Reply