அபரா ஏகாதசி வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியாகும். இந்த ஏகாதசிக்கு ‘அசல ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு. ஒரிசாவில் இந்த ஏகாதசியை ‘ஜலகிரீட ஏகாதசி’ என அழைக்கிறார்கள். பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ‘பத்ரகாளி ஏகாதசி’ எனக் கொண்டாடுகிறார்கள்.
அபரா ஏகாதசி விரதம் இருப்பவன் வாழ்வில் மிகுந்த புகழ் பெறுகிறான்.
HANDPICKED RELATED CONTENT:
ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும் |
அபரா ஏகாதசி விரதம்பல வகையான கொடிய பாபங்களை போக்குகிறது. அவை எப்பேர்பட்ட பாபங்கள் தெரியுமா?
1. பொய் சாட்சி சொல்வது
2. போலி ஆயுர்வேத மருத்துவராகஅல்லதுகணக்காளராக அல்லது ஜோதி டராக பணிபுரிவது
3. பிறன் மனைவியோடு தகாத உறவு வைத்துக்கொள்வது
4. ஒருபிராமணனையோ,கருவையோ,பசுவையோ கொன்ற பாபம்
5. போர்வீரனாக இருந்துகொண்டு போர்க்களத்தை விட்டு ஓடும் அவலம்
6. தனது வர்ணத்தை பின்பற்றாத பாபம்
7. தனக்கு ஆன்மீக ஒளி காட்டிய ஆசானை இகழும் தவறு
8. பிறரை போலியாக முகஸ்துதி செய்வது
9. கடவுளை நிந்திப்பது
10 .பிறரை ஏமாற்றுவது
11. தராசில் சாமானை எடை போடும் போது ஏமாற்றுபவர்
12. தனது வேதத்தை தானே ஏற்படுத்திக் கொள்பவர்
அபரா ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன்கள்
1. புஷ்கர க்ஷேத்ரத்தில்மூன்று முறை குளிப்பதன்பலன்
2. மக மாதத்தில் சூரியன் மகரத்தில் இருக்கும் போது பிரயாகையில் குளிக்கும் பலன்
3. காசியில் சிவராத்திரி அன்று சிவனுக்கு வழிபாடு செய்வதன் பலன்
4. குரு சிம்மத்தை கடக்கும் போது கௌதமி ஆற்றில் நீராடும் பலன்
5. கயாவில்பித்ருக்களுக்கு ஸ்ராத்தம் செய்யும் பலன்
6. சிவ பெருமானை கேதார்நாத்தில் தரிசிக்கும் பாக்கியம்
7. சூரிய கிரகணத்தின் போது குரு க்ஷேத்திரத்தில் ஸ்நானம் செய்து பொன்னும்,பசுக்களும் யானைகளும் தானம் செய்வதன் பலன்
8. சூரியன் கும்பத்தை கடக்கும் போது பத்ரிநாதரை தரிசிக்கும் பலன்
9. ஒரு கர்ப்பவதியான பசுவை ,வளமான நிலம் மற்றும் தங்கத்தோடு தானம் செய்ததன் பலன்.
இத்தனை பலன்களுக்கும் மேலாக ஒருவன் தனது பாப சுமையை கழிக்கிறான். புண்யவானாகிறான். வேறென்ன வேண்டும் நமக்கு?
பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணர் தருமருக்கு இத்தனை பலன்களையும் எடுத்துரைத்தார். அத்தகைய மகிமை வாய்ந்த அபரா ஏகாதசியை நாம் அனுசரித்து விஷ்ணுவின் திருவடி சேர்வதே நம் வாழ்வின் பலன்.
எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply