பிரதோஷம் ஜூலை 6 வளர்பிறை திரயோதசியில் வருகிறது. எம்பெருமானாம் ஈசனின் ஆடல் கண்டு களிக்கும் நமக்கு அவரது அர்த்தநாரீஸ்வர உருவம் விந்தை மிகுந்த ஒன்றாகத் தெரிகிறது.
அர்த்தநாரீஸ்வரர் என்பதன் அர்த்தம்
அர்த்த என்றால் பாதி எனப் பொருள். நரன் என்றால் ஆண் என்றும் நாரி என்றால் பெண் என்றும் பொருள்.பாதி ஆணும் பாதி பெண்ணுமான தோற்றத்தில் சிவன் காட்சி அளிக்கும் தோற்றமே அர்த்தநாரீஸ்வரர்.சிவனும் சக்தியும் சரி சமமாக இணைந்து உலகை ஆட்டுவிப்பதையே இது குறிக்கிறது.
அர்த்தநாரீஸ்வர தோற்றத்தின் உள் அர்த்தம்
சிவன் ஆண் சக்தி. பார்வதி பெண் சக்தி. இருவரும் இணைந்தால் தான் பிரபஞ்சம் இயங்கும். இதனாலேயே இறைவன் தனது இட பாகத்தை சக்திக்கு அளித்து அவரோடு இணைந்து காட்சி அளிக்கிறார். சக்தியின்றி சிவனில்லை. சிவன் அன்றி சக்தி இல்லை. ஆன்மிகமும், உலக வாழ்வும் இணைந்த நிலை எனலாம். வன்மையும்,மென்மையும் இணைந்தது போல சொல்லலாம். எனவே எதிர்மறையான சக்திகளை இணைக்கும் வகையில் காட்சி தருகிறார் அர்த்தநாரீஸ்வரர்.
இத்தகைய உயர்ந்தோனை ,எம்பெருமானை பிரதோஷ நேரத்தில் வழிபட்டு உயர்வடைவோமாக
Leave a Reply