நீங்கள் உங்கள் மகளின் திருமணம் தள்ளிச் செல்கிறது என்ற கவலையில் உள்ளீர்களா? மனதில் வேதனையும், வருத்தமும் அதிகமாக உள்ளதா? என்ன செய்வதென்று அறியாமல் திகைப்பில் உள்ளீர்களா?
உங்களது மகன் 12ம் வகுப்புப் பரீக்ஷை எழுதுகிறானா? நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டுமே என மனதில் எதிர்பார்ப்புகளை சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறீர்களா?
உங்கள் கவலைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு உண்டு. அது என்ன தெரியுமா?
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வேண்டுவது தான்.
விக்ன விநாயகன் பாதம் பணிந்தால் உங்கள் துன்பங்கள் நீங்கும் என்பது தெரிந்த உண்மை தானே? வாழ்வின் இன்னல்களைக் களைவதில் பிள்ளையாருக்கு ஈடு இணை உண்டோ?
தேய்பிறை சதுர்த்தியை நாம் சங்கடஹர சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். பேரிலேயே இந்த நாளின் பெருமை தெரிகிறது:
’சங்கட’ என்றால் கஷ்டம். ’ஹர’ என்றால் நீக்குதல். பக்தர்களின் கஷ்டங்களை நீக்கும் ஆனைமுகத்தோனை அருமையாக வேண்டி, தங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபடவே நாம் சங்கடஹர சதுர்த்தி கொண்டாடுகிறோம்.
மார்ச் மாத சங்கடஹர சதுர்த்தி 5ம்தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது.
சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டினால், நமக்கு தெளிவு பிறக்கும். மனதில் நம்பிக்கையும், உற்சாகமும் இருக்கும்.இன்னலில் இருந்து விடுபட வழி பிறக்கும். ஒரு கோரிக்கையை மனதில் வைத்து, விக்ன விநாயாகரைப் பிரார்த்திக்க, அவரும் மனமிரங்கி வழி விடுவார். கூடிய சீக்கிரம் ஒரு தீர்வு கிட்டும்.
சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை எவ்வாறு வழிபட வேண்டும்?
ஆனைமுகத்தோன் எளிய பொருட்களிலேயே திருப்தி அடைபவர். எருக்க மாலையும், அருகம் புல்லும் கொண்டு அர்ச்சித்தாலே மகிழ்ச்சி அடைபவர்.
லட்டும், மோதகமும் உண்ண விரும்புபவர். தேங்காய்ப் பிரியர்.
சங்கடஹர சதுர்த்தி அன்று 5 வெற்றிலை, 5 பாக்கு, 5 வாழைப் பழம் மற்றும் 2 தேங்காய் எடுத்துச் சென்று கோயிலில் பிள்ளையாரை வணங்க வேண்டும்.
கோயிலில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு, பிள்ளையாரிடம் நமது கோரிக்கையை எடுத்துச் சொல்லி, மனமுருக வேண்ட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்ய கூடிய சீக்கிரம் பலன் கிட்டும்.
மஹா கணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக அமைகிறது. விக்ன விநாயகர் எல்லா தடையையும் நீக்கி வெற்றியை தேடி தருபவர். இன்னல்களை களைபவர்.
எல்லா புது முயற்சிகளுக்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயக பெருமானை துதிப்பது நலம்.
யார் யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமத்தை வருடம் ஒரு முறை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகும்.
ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதி ஹோமம் செய்வதால் வாழ்வில் தடைகள் அனைத்தும் நீங்கும்.
எங்கள் அமா வைதீக மையத்தில் நாங்கள் கணபதி ஹோமத்தை சிறந்த புரோஹிதர்கள் மூலம் நடத்தித் தருகிறோம். அனைவரும் பயன்படும் வகையில் எங்கள் மையத்தில் பல சேவைகளை அளிக்கிறோம். விபரங்களை இங்கு காணலாம். http://bit.ly/2CSRn1R
நாம் எவ்வளவுக்கெவ்வளவு தீவிர பக்தியுடன் சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரிடம் வேண்டுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நமது கோரிக்கைகள் நிறைவேறும்.
Leave a Reply