ஆடி மாத சுக்ல பக்ஷ சஷ்டி ஜூலை 28 ம் தேதி வருகிறது. இந்த நாள் கந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
கடம்பனின் தனி பெருங்குணங்கள் என்ன தெரியுமா?
கந்தவேள் கருணைக் கடல்.அதே சமயம் போருக்குரிய கடவுள்.சிறந்த வீரர்.அழகு வாய்ந்தவர்.தாய் பார்வதி அளித்த வேலை போர் கருவியாகக் கொண்டு தேவர்களின் சேனைக்கு தலைமை தாங்கி சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களாம் சிங்கமுகனையும் தாரகாசுரனையும் அழித்தவர்.
இது மட்டுமல்ல.என்றும் இளமையானவர்.எனவே முருகர் என நம்மால் அன்பாக அழைக்கப்பட்டவர்.ஞானத்தின் இருப்பிடம்.ஆன்மீக வழி காட்டுபவர்.தகப்பன் சாமி.தகப்பனுக்கே பிரணவத்தின் பொருளை போதித்தவர். வேண்டிய வரத்தை வாரி வழங்கும் வள்ளல்.
முருகன் என்றாலே அவரின் அறுபடைவீட்டை நினைக்காதவர் இல்லை. பழனி,திருப்பரங்குன்றம்,திருத்தணி,பழமுதிர்சோலை, திருச்செந்தூர்,சுவாமிமலை என ஆறு இடங்களில் கோயில் கொண்டு திகழ்கிறார் திருமுருகப் பெருமான்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர்,மலேசியா ,ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலும் முருகனை போற்றி வழிபடுகிறார்கள்.
தை பூசம்,கந்த சஷ்டி பெருவிழா,மாசி மகம் ஆகியவை கார்த்திகேயனுக்காக கொண்டாடப்படும் உத்சவங்களாகும்.பக்தர்கள் காவடி,பால் குடம் எடுத்தும், பாத யாத்திரையாக கந்தன் கோயில்களுக்கு சென்றும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.சஷ்டி திதி மாதந்தோறும் வருமன்று தங்கள் பக்தியை விரதமிருந்து முருகனை ஆராதித்து வெளிப்படுத்துகிறார்கள்.
இவ்வாறாக சஷ்டி அன்று விரதமிருந்து ,முருகனை போற்றி அவரது திருவருளுக்கு பாத்திரமாவோமாக.நமது ஆன்மீக வாழ்வை மேம்படுத்து வோமாக.
Leave a Reply