ஏப்ரல் 27, வியாழக்கிழமை, 2017. கார்த்திகை விரதம்.
கார்த்திகை விரதம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை என்ன?
கார்த்திகை 27 நட்சத்திரங்களில் ஒன்று. சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தை மாதந்தோறும் கடக்கும் நாளே கார்த்திகை எனக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனின் பிறந்த நாளாக வணங்குகிறோம். விரதமிருப்பவர்களுக்கு பலன் நிச்சயம் உண்டு. கோவில்களில் முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருக பெருமான் ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். அவர் தனது தாய் பார்வதியால் ஒரே குழந்தையாக ஆக்கப்பட்ட போது சிவன் கார்த்திகைப் பெண்டிரை நட்சத்திரமாக வானில் என்றும் திகழ அருள் பாலினார்.
கார்த்திகை விரதமிருந்தால் வாழ்வில் இன்னல்கள் நீங்கி நலம் பெருகும். முக்தி கிடைக்கும்.ஆன்மீக நலன் பெருகும்.
சுப்பிரமணிய புஜங்கம்,கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம் ஆகிய ஸ்லோகங்களை சொல்வது நன்மை பயக்கும்.
எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். சிறந்த புரோஹிதர் சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply