கால பைரவ ஜெயந்தி, நவம்பர் 10, 2017
வாழ்வில் வெற்றி கிடைக்க காலபைரவரை வேண்டுங்கள்!
கால பைரவ ஜெயந்தி ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று வருகிறது. இது கால பைரவரின் பிறந்த தினமாகும். இது பொதுவாக நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வருகிறது. காலபைரவர் சிவ அம்சமாவார்.
கால பைரவ ஜெயந்தி, நவம்பர் 10, 2017 அன்று வருகிறது. வாக்ய பஞ்சங்கப்படி, கால பைரவாஷ்டமி நவம்பர் 11 ஆகும்.
கால பைரவாஷ்டமி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் இந்த தினத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள்.
கோயில்களில் சிறப்பு அபிஷேகமும்,பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
மக்கள் திரளாக கோயில்களுக்கு சென்று கால பைரவருக்கு நடத்தப்படும் பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
வருடத்திற்கு ஒரு முறை கால பைரவ ஜெயந்தி ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனை காலாஷ்டமி என்றும் கூறுவார்கள்.
கால பைரவர் சிவனின் அம்சமாவார். ஒரு தடவை, மும்மூர்த்திகளாம் பிரம்மா ,விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரு விவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மூவரிலும் யார் உயர்ந்தவர் எனபதைப் பற்றி அவர்களுக்குள் ஒரு சூடான விவாதம் எழுந்தது.
ஒரு கட்டத்தில் பிரம்மா சிவனை இழிவாகப் பேச சிவன் வெகுண்டார் .கோபத்தில் அவர் கால பைரவரைப் படைத்தார் .கால பைரவர் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை வெட்டி எறிந்தார். அதிலிருந்தே பிரம்மாவிற்கு நான்கு தலைகள் ஆயின.இவ்வாறாக சிவனின் கோபத்தில் தோன்றிய கடவுளே கால பைரவர்.
பிரம்மாவின் தலையை வெட்டிய காரணத்தால் கால பைரவரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து விடுபட அவர் காசிக்குச் சென்றார். இதனால்தான் காசியில் கால பைரவருக்கு பல கோயில்கள் உள்ளன.
கால பைரவரை வணங்கினால் நாம் நம் வாழ்வில் எதிர் கொள்ளும் இன்னல்கள் நீங்கும்.
வாழ்வில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க கால பைரவரை வணங்க வேண்டும்.
காலபைரவ ஜெயந்தி வழிபடும் முறை
கால பைரவ ஜெயந்தி அன்று முழு நாளும் விரதமிருந்து கால பைரவரை வழிபடுவார்கள்.
இரவு முழுவதும் கண் விழித்து, காலபைரவரின் கதையை படித்தும், கூறியும் அவரைப் போற்றுவார்கள்.
கால பைரவர், சிவன், பார்வதி ஆகிய தெய்வங்களை பூவும்,பழமும் கொண்டு பூஜை செய்வார்கள் .
கால பைரவரின் வாகனம் நாய். ஆகையால் நாய்களுக்கு பாலும்,இனிப்பும் கொடுக்கும் வழக்கம் உண்டு.
கால பைரவரை அவரது ஜெயந்தி அன்று வழிபட்டு வாழ்வில் வெற்றி பெறுவோமாக!
Leave a Reply