ஆவணி மாதத்தில், சங்கடஹர சதுர்த்தி செப்டம்பர் 9ம் தேதி வருகிறது.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை சட்டென்று நினைவில் கொள்ள தேவையான விஷயங்களை பார்ப்போமா?
1. சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய் பிறை சதுர்த்தி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது.
2. அதிகாலை எழுந்து, நீராடி பூஜை அறையில் பிள்ளையார் படமோ விக்ரகமோ வைத்துஅலங்கரித்து பிள்ளையார் ஸ்லோகங்களை சொல்லி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
3. முழு விரதம் இருப்பது உசிதம். காலையிலிருந்து விரதமிருந்து மாலை சந்திர உதயம் கண்டு பின் பிள்ளையார் பூஜை செய்து விரதத்தை முடிப்பது நல்லது.
4. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சந்திர உதயத்தை மாலையில் கண்ட பின் பூஜை செய்ய வேண்டும்.
5. பிறகு விரதம் முறிக்க வேண்டும்.
6. அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்தால் மிகவும் விசேஷம்.
7. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில் படும்கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள் பெறலாம்.
8. சங்கடஹர சதுர்த்தியை ஒரு வருடம் கடைப்பிடித்தால் நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.
இத்தகைய மகிமை வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து நம் வாழ்வில் நன்மை பெறுவோமாக!
நாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் . மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply