2018 ம் ஆண்டு, ஜனவரி 31ம் தேதி அன்று சந்திர கிரஹணம் வருகிறது. இது தை மாதம் 12ம் நாள் புதன் கிழமை அன்று வருகிறது.
இந்த கிரஹணம் மாலை 6.04 க்கு ஆரம்பித்து இரவு 9.38 க்கு முடிகிறது.
பெங்களூரு: 18.15 - 21.38
சென்னை: 18.04 - 21.38
மும்பை: 18.27 - 21.38
கல்கத்தா_ 17.16 - 21.38
புது டெல்லி : 17.53 - 21.38
துபாய்i 18.01 - 20.08
சிட்னி , ஆஸ்த்ரேலியா 21.51 - 3.08 , 1-2-2-018
நியூயார்க் (கிழக்குக் கரை) 5.51 AM - 7.06 AM
டல்லாஸ் , டேக்ஸ்சாஸ் (Central USA) 4.51 AM - 7.24 AM
லாஸ் நகேல்ஸ் (மேற்குக் கரை ) 2.51 AM - 6.55 AM
டொரோண்டோ , ஒட்டாவா (Ottaawa), கோலோ 5.51 AM - 7.34 AM
தர்ப்பணம் செய்பவர்கள் கிரஹணம் பிடிக்கும் போதும், விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும். கிரஹணம் முடியும் நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகர மாஸே சுக்லபஷே பௌர்ணமாஸ்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர யுக்த்தாயாம் புஷ்ய நக்ஷத்ர உபரி ஆஸ்லேஷா நக்ஷத்ர யுக்த்தாயாம் புண்யதிதௌ ராஹுக்ரஸ்த ஸோமோபராக புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே.
பௌர்ணமி மாலை 6.57 வரை உள்ளது. பின்னர் பிரதமை திதி; பூச நக்ஷத்திரம் மாலை 5.36 வரை உள்ளது. பின்னர் ஆயில்யம் வந்துவிடுகிறது. தர்ப்பணம் செய்யும் நேரத்தை ஒட்டி திதியையும், நக்ஷத்திரத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
புனர்பூசம்
ரேவதி
பூசம்
ஆயில்யம்
கேட்டை
விசாகம்
அனுஷம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களும், புதன் கிழமையில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தலையில் பனை இலையில் கீழ்க் கண்ட ஸ்லோகத்தை எழுதி, அதை நெற்றியில் கட்டிக் கொள்ள வேண்டும்.
கிரஹணத்திற்கு பின்,அந்த பனை இலையை நீக்கிவிட்டு ,பூசணிக்காய், தேங்காய், காசு ஆகியவற்றை ஒரு அந்தணருக்குத் தானம் கொடுக்க வேண்டும்.
योसौ वज्रधरो देव: आदित्यानां प्रभुर्मत:।
सहस्रनयन: चन्द्र: ग्रहपीडाम् व्यपोहतु।।
யோஸௌ வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மத: I
ஸஹஸ்ர நயனஸ்சந்த்ர: க்ரஹபீடாம் வ்யபோஹது
சூரியன், புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும் நிகழ்வு சந்திர கிரஹணமாகும்.
இந்த வருட சந்திர கிரஹணத்தின் சிறப்பு
இந்த வருடம் ஜனவரி மாதம் பௌர்ணமி இரண்டு முறை வருகிறது. இவ்வாறு நடப்பது மிகவும் அரிதானது. இப்படி வரும் சந்திரனை நீலச் சந்திரன் என்பார்கள்.
இந்த வருடம், சந்திர கிரஹணம் ஜனவரி 31ம் தேதி வருகிறது.
இது ஆசியாவின் இந்தியாவில் முழுமையான சந்திரக் கிரஹணமாக இருக்கும். இன்று சந்திரன் சிவப்பு நிறத்தில் காணப்படும். வட கிழக்கு மாநிலங்களில் பகுதியான சந்திர கிரஹணமாக இருக்கும்.
இந்த சந்திர கிரஹணத்தன்று பூஜை மற்றும் இறைவனுக்காக காரியங்கள் இந்த நேரத்தில் செய்ய கூடாது. பூஜை விளக்கு எரியக் கூடாது.
தர்ப்பணம் செய்பவர்கள் இரவு 6.58 க்கு செய்ய வேண்டும்.
கர்பிணி பெண்கள் மாலை 5 மணியிலிருந்து, இரவு 8.50 வரை வெளியே வரக்கூடாது.
கிரஹண நேரத்தில் சாப்பிடுவது, குடிப்பது, ஊசியை உபயோகப்படுத்துவது ஆகியவை கூடாது.
சந்திர கிரகணம் முடிந்த பின் சந்திரனை தரிசனம் செய்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும்.
அனைவரும் கிரஹண நேரத்தில் மந்த்ர ஜபம் செய்வது நல்லது அது 100 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது.
இக் கிரஹண புண்ய காலத்தில் நதி ஸ்நானம், ஸமுத்ர ஸ்நானம், தடாக ஸ்நானம் மிக விசேஷம்.
Leave a Reply