சனி பகவான் 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை 12 ராசிகளில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்கிறார். இதுவே சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
மற்ற கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் சிறிதளவு காலமே இருக்கிறார்கள். சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் ஆகியோர் 3௦ நாட்கள் இருக்கிறார்கள். செவ்வாய் 45 நாட்களுக்கும், சந்திரன் 2½ நாட்களுக்கும், குரு ஒரு வருடத்திற்கும், ராகு/கேது 1½ வருடங்களுக்கும் ஒரு ராசியில் இருக்கிறார்கள். ஆனால் சனி பகவான் 2 1/2 வருடங்கள் ஒரு ராசியில் இருக்கிறார்.
எனவே, இந்த வேளையில் சனி பகவானுக்கு ஹோமம், பரிகாரங்கள் செய்து அவரின் அருளைப் பெற வேண்டியது அவசியம். இதனால் வாழ்வில் சனிப் பெயர்ச்சியால் வரும் கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
2017ம் ஆண்டு சனிப் பெயர்ச்சியில், சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். கேட்டை நக்ஷத்திரத்திலிருந்து, மூல நக்ஷத்திரத்திற்குள் நுழைகிறார்.
2017ம் ஆண்டில் சனிப் பெயர்ச்சி 19.12.2017 செவ்வாய்க் கிழமை அன்று சுக்ல பிரதமையும், அமிர்த யோகமும், மூல நக்ஷத்திரமும கூடிய நாளில் காலை 9.55 மணியளவில்ந டைபெறுகிறது.
ஹேமலம்ப வருஷம் மார்கழி மாதம் 4ம் நாள் (19.12.2017) மங்கள வாரமும் சுக்ல ப்ரமையும் மூல நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.55 மணியளவில் கிரஹாதி சக்ரவர்த்தியாகவும் நவகிரக நாயகனாகவும் விளங்கும் அருள்மிகு சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுர் ராசிக்கு ப்ரவேசிக்கிறார்.
அமா வேதிக் சர்வீஸஸ் சனிப் பெயர்ச்சியை ஒட்டி "சென்னையில் திருநள்ளாறு” - சனிப்பெயர்ச்சி ஹோமம் பெரிய அளவில் நடத்த உள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்று அனைவரும் சனி பகவானை பிரார்த்தித்து அவரின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்
"சென்னையில் திருநள்ளாறு” சனிப்பெயர்ச்சி ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே பதிவு செய்து கொள்ளவும்
Leave a Reply