சஷ்டி அன்று கந்தனை துதிப்போருக்கு இப்பிறவிப் பிணி நீங்கும் என்பது உண்மையே. இந்த நாளில் முருகனை போற்றும் வேளையில் அவரின் நற்குணங்களைப் பற்றி சற்று சிந்திப்போமா?
முருகன் போரின் பிரதிபிம்பம். சூரபத்மன், சிங்கமுகன், தரகாசுரன் ஆகியோரை அழிக்க சிவனால் உருவாக்கப்பட்டவர். போர்கலையில் வல்லவர்.
சங்க இலக்கியத்தை பேணி பாதுகாப்பவர். தொண்டை தமிழ் இலக்கியத்தின் கிளைகளாம் இலக்கியம், கவிதை மற்றும் நாடகம் ஆகியவற்றை காப்பவர். நக்கீரர், ஔவையார் ஆகியவர்களால் பாடப்பட்டவர்.
முருகு என்றால் தமிழில் அழகு, இளமை எனப் பொருள். முருகன் என்றால் அழகன் எனப் பொருளுண்டு .
முருகன் ஞானத்தின் இருப்பிடம். ஞான காரகன். பிரணவத்தின் பொருள் சொன்னவன்.
அகந்தையை அழிக்கும் இறைவன் முருகன்.அவரின் சேவல்கொடி அவரின் இந்த மகிமையை நமக்கு விளக்குகிறது. அரக்கர்களின் அகந்தையை அழித்தவர் தானே?
முருகர் பிறந்த கதையும் வள்ளி தெய்வயானையை மணந்த கதையும் நாம் அறிந்ததே. அவர் ஒரு மாம்பழத்திற்காக தனது தாய் தகப்பனிடம் கோபம் கொண்டு பழனி ஆண்டியாக கோலம் கொண்ட அற்புதம் ஒரு இனிமையான கதையே.
இப்பேற்பட்ட முருகனை சஷ்டி அன்று துதித்து நற்கதி பெறுவோமாக.
Leave a Reply