புரட்டாசி மாத சுக்ல பக்ஷ பிரதோஷம் அக்டோபர் 3 அன்று வருகிறது. சிவனாரை வணங்க உகந்த நாள்.
சிவனின் அணிகலன்கள் விசேஷமானவை. அதே போல் அவரது நெற்றிக் கண்ணும் அவரது சிறப்பு அம்சமாகும்.
சிவனின் மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணின் சிறப்பு என்னவென்பதை காம தகன கதை மூலம் அறிவோமா?
சிவன் காமனை தனது நெற்றிக் கண்ணை கொண்டு எரித்த கதை
தாக்ஷாயணி தக்ஷனின் மகள். சிவனின் மனைவி. சதி என்றும் அழைக்கப்படுபவள். தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்திற்கு சென்று அவமரியாதைக்கு உள்ளாகியதால் தீக்கிரையானாள். இதனால் கோபம் கொண்ட சிவன் ஆழ்ந்த த்யானத்திற்கு சென்று விட்டார். சதி பார்வதியாக உருவெடுத்தாள். சிவனையும், பார்வதியையும் இணைக்க விரும்பிய மன்மதன் (காம தேவன்) சிவனின் மேல் மலர் அம்பு விட,,அவர் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டார்.
இதனால் நெற்றிக் கண் சிவனின் அழிக்கும் சக்தியை குறிக்கிறது. நம்முள் இருக்கும் ஆசையையும் அழிக்கிறது. அப்போதுதானே மோக்ஷ நிலை அடைய முடியும்?
சிவனின் நெற்றிக் கண் அவரது ஞானத்தைக் குறிக்கிறது. அவரது வடது கண்ணும், இடது கண்ணும் அவர் இந்த உலகத்தில் ஆற்றும் கடமைகளை குறிக்கின்றன. நெற்றிக் கண் அவரது ஆன்மிக சக்தியைக் காட்டுகிறது.
இத்தகைய பெரியோனை பிரதோஷம் அன்று வழிபட்டு நாம் நலம் பெறுவோமாக!
Leave a Reply