ஐப்பசி கிருஷ்ண பக்ஷ பிரதோஷம் நவம்பர் 15ம் தேதி புதன் கிழமை வருகிறது.
பிரதோஷ காலத்தில் இறைவனை வணங்கும் போது அவரைப் பற்றிய சில உயர்வான விஷயங்களைச் சிந்தித்து பார்ப்போமே?
1. ராவணன் ஒரு பெரிய பலசாலி. சீதையை அபகரித்து, ராமனோடு போர் வரக் காரணமானவன். இந்த அரக்கன் சிறந்த சிவ பக்தன் என்பது தெரியுமா? சிவனிடமிருந்து விலை மதிக்க முடியாத வரங்கள் பெற்றவன் என்பது தெரியுமா?
2.
அவரின் திரிசூலம் மனிதனுக்கு மூன்று உலகங்களோடு இருக்கும் பிணைப்பைக் காட்டுகிறது; அவனது உள் உலகம், அவனுக்கு வெளியில் இருக்கும் உலகம், அதைத் தாண்டிய விரிந்த உலகம்.
3. ஆஞ்சநேயர் சிறந்த ராம பக்தர்.திறமை மிகுந்த வீரரும் கூட.ராமர் விஷ்ணு அவதாரம் என்பது நாம் அறிந்ததே.ஆஞ்சநேயர் சிவனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
4. சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பு அண்டத்தின் அமைதியைக் குறிக்கிறது
5. ஐயனின் அர்த்தநாரீஸ்வரர் கோலம் வேறு எங்கும் காணப்பட முடியாதது
6. சிவபெருமான் அபஸ்மாரன் என்ற அசுரனை தனது காலில் போட்டு மிதித்து நடராஜர் கோலத்தில் நின்றது அறியாமையை வெற்றி கொள்ள அறிவினால்தான் முடியும் என உலகத்திற்கு எடுத்துக் காட்டவே!
7. சிவனார் பூசிக் கொள்ளும் சாம்பல் அண்டத்தின் தன்மைகளான நிரந்தரத்தையும், நிலையாமையையும் ஒரே நேரத்தில் குறிக்கிறது. சாம்பல் பொருட்களை எரிப்பதால் உண்டாகிறது .ஆனால் அது எரிவதில்லை.
இவ்வாறு பற்பல அரிய விஷயங்களை தன்னுள் அடக்கிய எம்பெருமானை இன்னும் பக்தி சிரத்தையோடு பிரதோஷ வழிபாடு செய்வோமாக!
Leave a Reply