பிரதோஷம் ,அக்டோபர் 17, 2017
ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ பிரதோஷம் அக்டோபர் 17,2017 அன்று வருகிறது. சிவனை வழிபட ஆலயங்களுக்கு செல்லும் போது நாம் இறைவனுக்கு முன்னால் ஒரு ஆமையும் அமர்ந்திருப்பதை பார்க்கிறோம்.
ஆமை தனது ஓட்டிற்குள் உடலை நுழைத்துக் கொண்டால் அப்படியே இருக்கும்.அதை போல் நாமும் நம் உணர்வுகளை கட்டுப்படுத்தி இந்த உலகில் நிதானமான வாழ்வை வாழ வேண்டும்.
ஆமை ஓட்டிற்குள் இருக்கும் நிலை கூர்மாசனத்தை ஒத்தது. சிவன் ஆதி யோகியாகக் கருதப்படுபவர். யோகக் கலையை உலகிற்கு கற்பித்த ஆசான். அவரது ஆலயத்தில் ஆமையின் சிலை இருப்பது சரியான ஒன்றாகும்.
பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் ஒன்று கூர்மாவதாரமாகும். கூர்மத்தை (ஆமையை) சிவன் கோயிலில் வைப்பதன் மூலம் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் விளக்கப்படுகிறது.
இனி மேல் பிரதோஷ வேளையில் சிவனை வழிபடும் போது கோயிலில் இருக்கும் கூர்ம சிலைக்கும் மரியாதை செலுத்துவோமே?
Leave a Reply