அமா வேதிக் சர்வீஸஸ் வழங்கும் "சென்னையில் திருநள்ளாறு” சென்னையில், திருநள்ளாறுக்கு இணையாக சனிப்பெயர்ச்சி ஹோமம்
சனீஸ்வர பகவான் நவ கிரகங்களில் முக்கியமானவர். நமது ஆயுளுக்கும்,தொழிலுக்கும் காரகன். நமக்கு நன்மைகளை அள்ளித் தருபவர். அதே சமயம் நமது பாப புண்ணியங்களுக்கு ஏற்றார் போல் பரிசுகளும், தண்டனைகளும் தரும் நியாயாதிபதி.
சனி பகவான் 21/2 வருடங்களுக்கு ஒரு முறை 12 ராசிகளில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்கிறார். சனி பகவானை சனி பெயர்ச்சியின் போது வழிபடுவது அவசியம் இதனால் நமது வாழ்வில் இன்னல்கள் குறையும்.
2017ம் ஆண்டில் சனிப் பெயர்ச்சி 19.12.2017 செவ்வாய்க் கிழமை அன்று சுக்ல பிரதமையும், அமிர்த யோகமும், மூல நக்ஷத்திரமும கூடிய நாளில் காலை 9.55 மணி அளவில் நடைபெறுகிறது.
ஹேமலம்ப வருஷம் மார்கழி மாதம் 4ம் நாள் (19.12.2017) மங்கள வாரமும் சுக்ல ப்ரமையும் மூல நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.55 மணியளவில் கிரஹாதி சக்ரவர்த்தியாகவும் நவகிரக நாயகனாகவும் விளங்கும் அருள்மிகு சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுர் ராசிக்கு ப்ரவேசிக்கிறார்.
அமா வேதிக் சர்வீஸஸ் சனிப் பெயர்ச்சியை ஒட்டி "சென்னையில் திருநள்ளாறு” - சனிப்பெயர்ச்சி ஹோமம் பெரிய அளவில் நடத்த உள்ளது.
சென்னையில் திருநள்ளாறு சிறப்பு அம்சங்கள்:
திருநள்ளாறில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கலச ஸ்தாபனம் செய்யப்படுவதால் சனி பகவானை திருநள்ளாறில் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது உறுதி.
சாத்தியமில்லாததும் சாத்தியப்படும் – திருநள்ளாரில் நடைபெறுவது போன்றே இங்கு நடைபெறுகிறது. இது எங்கும் கிடைக்காத அரிதான ஒன்று.
இந்த ஹோமத்தில் பங்கேற்று அனைவரும் சனி பகவானை பிரார்த்தித்து அவரின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்
"சென்னையில் திருநள்ளாறு” சனிப்பெயர்ச்சி ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே பதிவு செய்து கொள்ளவும்.
Leave a Reply