ஏப்ரல் 24, 2017, திங்கட்கிழமை சோம பிரதோஷம்
சோம பிரதோஷம் திங்கட் கிழமை அன்று வருவது. சிவ பக்தர்களுக்கு உகந்தது. திங்களன்று சிவனை வழிபடுவதை விசேஷமாக கருதுகிறோம். அன்று பிரதோஷமும் வந்தால் வேறு என்ன பேறு வேண்டும்? வீடுபேறு எளிதில் கிட்டுமன்றோ?
பிரதோஷம் திரியோதசி திதிகளில் வளர்பிறையிலும் ,தேய் பிறையிலும் வருவது என்பது நாம் அறிந்த விஷயம். இந்தநாளில் சிவனையும் நந்தியையும் வணங்குவதும் நாம் வழக்கமாக செய்யும் ஒன்றே.
ப்ரதோஷ காலமாம் மாலை வேளையில் சிவனுக்காக கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்வதும் நமது வழிபாட்டு முறைகளில் ஒன்று பிரதோஷ விரதம் இருப்பது பல நன்மைகளை தரும்.
பகலில்உணவு உண்ணக் கூடாது. மாலையில் குளித்து, கோவில் சென்று, இறை வழிபாடு செய்த பின் சிவனடியார்களோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.
பிரதோஷ விரதமிருந்தால் ஏழ்மை, நோய், பயம், திடீர் மரணம், மரண அவஸ்தை, கடன், அவமானம், பாபம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.
பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி பகவானின் கொம்பின் மேல் ஆடும் திருக்கோலம் காணக் கிடைக்காதது. இந்த வேளையில் கோயில் சென்று இறைவனிடம் வேண்டி நின்றால் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.
त्रिदलंत्रिगुणाकारंत्रिनॆत्रंचत्रियायुधं
त्रिजन्मपापसंहारम्ऎकबिल्वंशिवा
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பணம்
Leave a Reply