இந்த ஏகாதசி ஜெய ஏகாதசி ஆகும். ஏகாதசி விஷ்ணுவுக்கு உகந்த நாள் என்பது நாம் அறிந்ததே. இந்த ஜெய ஏகாதசி சிவனுக்கும் உகந்தது என்பது ஒரு அற்புதமான விஷயம். இதன் காரணம் ஜெய ஏகாதசி மக மாதத்தில் (வளர் பிறையில்) வருவதே ஆகும். மும்மூர்த்திகளில் இருவரை ஒரே நாளில் தொழுவது தனிச் சிறப்புதானே.
ஜெய ஏகாதசியின் பின்னணியில் ஒரு கதை உண்டு. இந்திரன் தலைமையில் கூடிய சபையில், ஒரு கந்தர்வர் கானம் இசைக்கும் போது அவரால் தனது பணியை செவ்வனே செய்ய முடியவில்லை. அவரது மனைவி அவர் அருகே இல்லாததே காரணம். சினங் கொண்ட இந்திரன், அவரின் மனைவி ஒரு ராக்ஷசியாக மாறுவாள் என சாபமிட்டார். மனமுடைந்த கந்தர்வர் வேண்டியும் இந்திரன் கோபம் தணியாமல் அவரை சபை விட்டு நீக்கினார். தன் இடம் திரும்பிய கந்தர்வர், தனது மனைவியை ராக்ஷஸ உருவத்தில் கண்டு மனம் பதைத்தார். அவரின் நிலை கண்ட நாரதர் அவரை ஜெய ஏகாதசி விரதம் இருக்கக் கூறினார். கந்தர்வரும் நற்பயன் பெற்றார்.
இப்படியாக ஜெய ஏகாதசி பிரச்சித்தி பெற்றது. இந்த நாளில் ஏகாதசி விரதம் இருந்து பகவானை வேண்டினால் இம்மையின் பாபம் தொலைந்து மறுமை கிட்டும். நாமும் அவ்வண்ணமே விரதம் இருந்து விஷ்ணுவின் பூஜை செய்து நற்பலன் பெறுவோம்.
ஏகாதசி விரதம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும், எப்படி கடைப்பிடிக்க வேண்டுமென அறிய ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும் வலைப்பதிவை பாருங்கள்.
Leave a Reply