18/11/2017 – சனிக்கிழமை கார்த்திகை அமாவாசை – ஒரு முக்கியமான நாள்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து மக்கள் கூட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருவிசனல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்திற்கு அலை மோதுகிறது.
காரணம் என்ன?
கார்த்திகை அமாவாசை அன்று ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு. இதற்கு கங்கா ஸ்நான உத்சவம் என்று பெயர்.
இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.
ஸ்ரீ அய்யாவாள் பஜனை சம்பிரதாயத்தில் போற்றப்படும் மனிதர். ஒரு நாள் அவர் தனது வீட்டில் ஸ்ரார்த்தத்திற்கு சமைத்த உணவை பசித்திருந்த ஒருவனுக்குக் கொடுத்து விட்டார். மறுபடியும் உணவு சமைத்தார். ஆனாலும் பிராமணர்கள் அவர் வீட்டில் சாப்பிட மறுத்துவிட்டார்கள்.
மறு வருடம், அவர் ஸ்ரார்த்தத்திற்கு அழைத்த போது, அழைப்பை மறுத்த பிராமணர்கள் ஸ்ரீ அய்யாவாள் கங்கையில் குளித்தால் தான் அவரது பாபத்திற்கு பரிகாரம் கிடைக்கும் எனக் கூறினார்கள். அய்யாவாள் அவர்களால் வயதான காலத்தில் வட இந்தியா வரை சென்று கங்கையில் குளிக்க முடியாது. மாறாக அவர் தனது வீட்டில் இருக்கும் கிணற்றில் கங்கையை வரவழைத்தார்.
இந்த நிகழ்ச்சி கார்த்திகை மாதம் அமாவாசை அன்று நடைபெற்றது. இதனால் இந்த அமாவாசை அன்று அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் இருக்கும் நீரில் குளிப்பதை விசேஷமாகக் கருதுகிறார்கள்.
Leave a Reply