தைப்பூசம் தை மாதத்தில் பௌர்ணமி அன்று பூச நட்சத்திரம் வரும் வேளையில் கொண்டாடப்படுகிறது.இது முருக வேளுக்கு மிகவும் உகந்த நாள்.
தைப்பூசம் அன்று அன்னை பார்வதி கந்தனுக்கு சூர பத்மனை அழிக்கும் பொருட்டு வேலினை ஆயுதமாக வழங்கினார்.அந்த வேல் அசுரனை அழிக்கும் ஆயுதம் மட்டுமன்று. நம் மனக் கெடுதல்களையும் அழிக்க வல்லது.உலகில் தீயதை நீக்கி நல்லதை கொடுப்பது.இந்த முறையிலேயே நாம் தைப்பூசமன்று கந்த கடவுளை வணங்குகிறோம். நமது தீயவை போய் நமக்கு நன்மை ஏற்பட வேண்டுகிறோம். இந்த நாளில் சிவ பெருமானும் பூமிக்கு வந்து மக்களின் கர்ம வினை அகன்று ஞானம் பிறக்க அருளியதாக ஒரு செய்தி உண்டு.
தைப்பூசம் அன்று முருகனுக்கு விசேஷ பூஜைகளும் அர்ச்சனைகளும் முருகர் கோவில்களில் உண்டு. பழனிக்கு பால் குடம் எடுப்பவர்களும், பாத யாத்திரை செல்பவர்களும், காவடி எடுப்பவர்களும் எத்தனையோ பேர். மற்ற கோயில்களிலும் முருக வழிபாடு சிறப்பாக இருக்கும். தமிழ் நாட்டிலும், மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த நாளை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.
Leave a Reply