நிர்ஜல ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் மகத்துவம் வாய்ந்தது. தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டிய ஏகாதசி. அப்படி விரதம் இருந்தால் மற்ற ஏகாதசிகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். ஆனால் கொடிய வெப்பத்தின் நடுவில் நீர் அருந்தாமல் விரதமிருப்பது மிக கடினம்.
நிர்ஜல ஏகாதசிக்கு பீம ஏகாதசி மற்றும் பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்றும் பெயருண்டு. இந்த வருடம் நிர்ஜல ஏகாதசி ஜூன் 5 ம் தேதி வருகிறது.
நிர்ஜல என்றால் ‘தண்ணீர் இல்லாமல்’ என வடமொழியில் பொருளாகும். தண்ணீர் அருந்தாமல் விரதமிருக்க வேண்டிய ஏகாதசி என அர்த்தம்.
பீமன் என்ற பெயர் நாம் அறிந்ததே. பாண்டு புத்திரனாம் பீமன் வாயுபுத்திரனும் ஆவார். பசி தாங்காதவர். மற்ற பாண்டு குமாரர்களும், திரௌபதியும் ஏகாதசி விரதமிருந்து திருமாலை வணங்குபவர்கள். பீமன் மட்டும் விரதமிருக்க மாட்டார். அவருக்கு உணவு உண்ணாமல் இருக்க முடியாது.
ஏகாதசி விரத பலனை அடைய நினைத்தார் பீமன். தனது தாத்தாவாம் வியாச மகரிஷியை அணுகி தனது அபிலாஷையை எடுத்துரைத்தார். ஏகாதசியின் மகிமையை எடுத்துரைத்த வியாச ரிஷி பீமனுக்கு ஒரு உபாயத்தை எடுத்துரைத்தார்.
வியாசர் நிர்ஜல ஏகாதசியின் மகத்துவத்தை எடுத்து கூறினார். நிர்ஜல என்றால் ‘தண்ணீர் இல்லாமல்’ என்று அர்த்தம் .தண்ணீர் கூட இல்லாமல் விரதம் இருந்தால் மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்கும் பலன் கிட்டும் என்றார்.
பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து 24 ஏகாதசிகளின் விரத பலனை பெற்றார். வைகுண்ட பதம் பெறும் யோக்யதையை அடைந்தார்.
நிர்ஜல ஏகாதசியின் பெருமையை அறிந்த ஏனைய பாண்டு புத்திரர்களும் திரௌபதியும் அதே போல் நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து விரத பலனை முழுமையாக பெற்றார்கள். பாண்டவர்கள் இந்த ஏகாதசியை அனுசரித்து பலன் பெற்றதால் இந்த ஏகாதசிக்கு பாண்டவ நிர்ஜல ஏகாதசி எனவும் பெயருண்டு.
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் மற்றைய ஏகாதசி விரதமிருந்த பலனுண்டு.
இந்த ஏகாதசி விரதமிருப்போரை வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். எம தர்ம ராஜாவின் கிடுக்கி பிடியிலிருந்து நாம் தப்பித்து விடலாம்.
புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.
வாழ்வில் வளமும் செல்வமும் பெருகும். பாப சுமை நீங்கும். பிறவி பிணி நீங்கும்.
நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.
ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.
இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள்.
இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள்.
நிர்ஜல ஏகாதசி அன்று நீர் அருந்த கூடாது. ஆச்சமனம் செய்யும் உத்திரணி நீரை மற்றும் பருகலாம்.
அன்று சாயங்காலம் மகாவிஷ்ணுவின் விக்ரகத்திற்குபால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இரவு முழுவதும் விஷ்ணு நாம ஜபம் செய்வது நலனைத் தரும்.
மறுநாள் காலை ஒரு பிராமணருக்கு பானை நிறைய தண்ணீரும், உணவும், குடையும், விசிறியும் கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் தங்கமும் தானம் வழங்கலாம்.
பிறகு விரதம் முறித்து உணவு உண்ண வேண்டும்.
நிர்ஜல ஏகாதசிக்கு ஜ்யேஷ்ட சுக்ல ஏகாதசி எனவும் பெயர் உண்டு. இதற்கான வர்ணனை பிரம்மவைவத்ர புராணத்தில் காணப்படுகிறது.
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்து அத்தனை ஏகாதசிகளின் விரத பலனை அடையுங்கள்.
நாங்கள் ஹோமம் மற்றும் பூஜை சேவைகளை நன் முறையில் செய்து தருகிறோம். எங்கள் புரோஹிதர் சேவைகளை பெற இணைய தளத்தில் அணுகுங்கள்.
Leave a Reply