சங்கட ஹர சதுர்த்தி, ஜூலை 12, புதன்கிழமை 2017.
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டு துன்பம் துடைக்கிறோம்.அவர் ஒரு முகத்தோடு நமக்கு அருள் புரிவதோடு ஐந்து முகங்களோடு பஞ்சமுக கணபதியாக சில கோயில்களில் காட்சி அளிக்கிறார். சில வீடுகளிலும் பஞ்ச முக தோற்றமுள்ள கணபதி சிலையை வணங்கி வழிபடுகிறார்கள்.
‘பஞ்ச’ என்றால் ஐந்து.’முகி’ என்றால் முகமுடையவர். ஐந்து முகங்களை கொண்ட கணபதியை பஞ்சமுகி கணபதி என்கிறோம். இந்த ஐந்து முகங்களும் வெவ்வேறு திசைகளை நோக்கி உள்ளன.
கணபதியின் ஐந்து முகங்களும் நம் உடலின் ஐந்து பிரிவுகளை குறிக்கின்றன.இவை யாவும் கணபதியின் ஆளுகைக்கு உட்பட்டவை.இறுதியில் சச்சிதானந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இந்த குழந்தைகளுக்கு பிரியமான கடவுள்.
நமது உடலின் ஐந்து பிரிவுகள் பின்வருமாறு:
1. அன்னமய பிரிவு: அன்னம் உணவை குறிப்பது. இது நமது உடல் இயக்கத்தை குறிக்கிறது
2. பிராணமய பிரிவு :பிராணன் நமது உயிர் மூச்சை குறிக்கிறது.நமது வாழ்வு இயங்கத் தேவையான ஆதார சக்தியை குறிக்கிறது
3. மனோமய பிரிவு:மனோ என்றால் மனது.நமது எண்ணங்கள்,சிந்தனைகள் ஆகியவற்றை குறிக்கும்.
4. விஞ்ஞானமய பிரிவு: விஞ்ஞானம் அறிவை குறிக்கும்.எதையும் அலசி சரியான முடிவெடுக்கும் புத்தியை குறிக்கும்.
5. ஆனந்தமய பிரிவு:எல்லையில்லா ஆனந்தம் அளிப்பவன் இறைவன்.அவனின் திருவடி நிழலே ஆனந்தமாகும்.இதுவே மனிதனுக்கு கடைசி நிலை ஆகும்.
பஞ்சமுக கணபதியை வழிபடுவோர் இறுதியில் ஆனந்த நிலை அடைகிறார்கள்.
வாழ்வில் தடைகற்கள் நீங்கும்.
குடும்ப வளம் பெருகும்.ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வீடுபேறு கிடைக்கும்.
பொதுவாக வீட்டில் வட கிழக்கில், மேற்கில், கிழக்கில் பஞ்சமுக கணபதி சிலை வைத்து வழிபடுவது நல்லது.இதிலும் கிழக்கே வைப்பது சால சிறந்தது .நன்மைகள் நாடி வரும்.
சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை வழிபட்டு நன்மைகள் நாடுவோம்.
Leave a Reply