ஜனவரி 29, 2௦18 அன்று வரும் சோமப் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது திங்கட்கிழமை, திரயோதசி திதியில், திருவாதிரை நக்ஷத்திரத்துடன் கூடி அமைகிறது.
இத்தகைய அமைப்பு பல வருடங்களுக்கு ஒரு முறைதான் அமைகிறது. இந்தப் பிரதோஷத்தின் பின்னணியில் ஒரு கதை உள்ளது. இந்தக் கதை சம்ஸ்கிருத நூலான சிவ இரகசியத்தின் தமிழாக்கத்தில் இடம் பெற்று உள்ளது.
ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஒரு வறிய பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பல பாபங்களைச் செய்து வந்தான். திங்கட் கிழமையும், திரயோதசியும், திருவாதிரை நக்ஷத்திரமும் கூடி இருக்கும் ஒரு நாளில், அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தான். அந்தக் கோயிலில் வழிபாடு எதுவும் நடக்கவில்லை. அவனுக்குப் பூஜை செய்யும் முறை தெரியவில்லை. ஆனாலும்,அவன் செய்த பூஜையை சிவனார் மனமார ஏற்றுக் கொண்டு, அவனுக்கு நிறைய செல்வங்களை வழங்கினார்.
பிரதோஷம் திரியோதசி திதிகளில் வளர்பிறையிலும் ,தேய் பிறையிலும் வருவது என்பது நாம் அறிந்த விஷயம். பிரதோஷ காலமாம் மாலை வேளையில் சிவனுக்காக கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்வதும் நமது வழிபாட்டு முறைகளில் ஒன்று
திங்கட் கிழமை அன்று வரும் பிரதோஷத்திற்கு சோம பிரதோஷம் எனப் பெயர். திங்களன்று சிவனை வழிபடுவதை விசேஷமாக கருதுகிறோம். அன்று பிரதோஷமும் வந்தால் வேறு என்ன பேறு வேண்டும்? தை மாதத்தில் சோம பிரதோஷம் 2018, ஜனவரி 29ம் தேதி அன்று வருகிறது.
சோமன் என்ற பெயர் கொண்ட சந்திரனை தலையில் சூடியமையால்,சிவனுக்கு சோமன் என்ற பெயர் உண்டு. ‘சோம’ என்றால் ‘அன்னை உமாவுடன் கூடிய’ என்றும் பொருள். இதனால் சோம பிரதோஷம் அன்னை உமாவுக்கும் மிகவும் உகந்ததாகும்.சிவனுக்கு உகந்த பிரதோஷம் திங்கட் கிழமை வருவதால் சோம பிரதோஷம் எனப் பெயர் பெற்றது.
ஜனவரி 29, 2௦18 அன்று வரும் பிரதோஷம் திங்கட்கிழமை, திரயோதசி திதியில், திருவாதிரை நக்ஷத்திரத்துடன் கூடி அமைகிறது.
இந்த அரிய நாள் ஜனவரி 29ம் தேதி வருகிறது. இந்த நாளில் பிரதோஷ வேளையில்,அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டு,அவர் அருள் பெறுவோமாக!
Leave a Reply