கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.
மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. சித்திரை மாத தேய் பிறையில் வரும் ஏகாதசிக்கு பாப விமோசனி ஏகாதசி எனப்படுகிறது. பாப மோசனி ஏகாதசி அன்று விரதம் இருந்து, பெருமாளை வழிபடுபட்டால் சகல பாவங்களும் தொலையும். மாந்தாதா என்ற மன்னனுக்கு லோமச முனிவர் இதன் பெருமையை விவரிக்க, அதை ஏற்று விரதம் இருந்து அவன் மேன்மை அடைந்தான்
பாப விமோசனி விரதம் அனுசரிப்பதால் வாழ்வில் பிசாசு, பூதம் இவற்றின் பாதிப்பு இருக்காது. பாபங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆத்மா புனிதம் அடையும். ஒரு மனிதன் சிறந்த குணவானாகத் திகழ்வான்
HANDPICKED RELATED CONTENT:
ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும் |
சித்ரரதர் என்பவர் கந்தர்வர்களின் பாடகர்களில் தலைமையானவர். அவர் பல நடன மங்கையருடன், கின்னரர்களுடன், கந்தர்வர்களுடன் சைத்ர ரத் என்னும் ஒரு அருமையான சோலையை வந்தடைந்தார். கண்களைக் கொள்ளை கொள்ளும் அந்த சோலைக்கு இந்திரனும் வந்தார். அந்த சோலைக்கு இவர்கள் அடிக்கடி வர ஆரம்பித்தார்கள்.முக்கியமாக சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் வருவார்கள்.
அந்த சோலையில் பல சாதுக்கள் வசித்து, தவம் புரிந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் மேதாவி என்பவர். தவ வலிமையையும், ஆன்ம சக்தியும் பெற்றவர். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த மேதாவி ரிஷி நெடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார்
HANDPICKED RELATED CONTENT:
ஆமல்கீ ஏகாதசி |
நடன மங்கைகளில் ஒருவரான மஞ்சுகோஷாவிற்கு மேதாவியை எப்படியாவது வசீகரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் மேதாவியின் சக்தியில் பயமும் மரியாதையும் கொண்டவள் அவள். எனவே சற்று தொலைவிலிருந்தே மதுரமான குரலில் கானம் பாடி அவரை மயக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். அங்கு வந்த காமதேவன் அவளின் எண்ணம் ஈடேற துணை புரிய உறுதி கொண்டார்.
பாடிக் கொண்டே மஞ்சுகோஷா மேதாவியின் அருகில் சென்ற போது காமதேவன் தனது பாணங்களை அவளது கண்கள் மூலம் மேதாவியின் மேல் தொடுத்தார். மஞ்சுகோஷாவின் பால் ஈர்க்கப்பட்ட மேதாவி அவளுடன் 57 வருடங்கள் காலம் கழித்தார். தனது உலகம் செல்ல விரும்பிய அவளிடம் இன்னும் சற்று காலம் தாமதிக்க வேண்டினார். மஞ்சுகோஷாவோ தான் இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்ததை குறிப்பிட்டாள்.
தனது தவறை உணர்ந்த மேதாவி அவளை ஒரு பிசாசினியாக கடவது என்று சபித்தார். அவள் அவரிடம் சாப விமோசனம் வேண்டியபோது அவர் பாப விமோசனி ஏகாதசி விரதம் மேற்கொண்டால் இந்த சாபத்திலிருந்து விடுபடலாம் என உரைத்தார். அவளும் பாப விமோசனி ஏகாதசி விரதம் இருந்து சாப விமோசனம் பெற்றாள்.
விஜய ஏகாதசி |
மேதாவி ரிஷி தனது தந்தை ச்யவன முனிவரின் ஆச்ரமத்திற்குள் நுழைய முயற்சித்த போது தந்தையால் தடுக்கப்பட்டார். அவரது பாபத்திற்கு பரிகாரமாக இதே பாப விமோசனி ஏகாதசி விரதம் இருக்க வேண்டுமென தந்தை சுட்டிக் காட்ட, மேதாவியும் அவ்வாறே செய்து தனது சாபத்திலிருந்து விடுபட்டார்.
பாப விமோசனி ஏகாதசி விரதமிருப்போருக்கு ஓராயிரம் பசுக்கள் தானம் செய்த பலன் கிடைக்கிறது. இந்த விரதத்தை அனுஷ்திப்பத்தால் ஒரு பிராமணரை கொன்ற பாபம், மது அருந்திய பாபம், கருவை கொன்ற பாபம் போன்ற பல கொடிய பாபங்கள் அழியப் படிவத்துடன் முக்தியும் கிடைக்கிறது.
பாப விமோசனி ஏகாதசி விரதமிருந்து பாபங்களில் இருந்து விடுபட்டு நற்குணம் பெற்று திகழ்வோமாக.
Leave a Reply