பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி பகவானின் கொம்பின் மேல் ஆடும் திருக்கோலம் காணக் கிடைக்காதது. இந்த வேளையில் கோயில் சென்று இறைவனிடம் வேண்டி நின்றால் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.
सत्यं ब्रवीमि परलोकहितं ब्रवीमि सारम ब्रवीम्युपनिषद्ध दयं ब्रवीमि ।
संसारमुल्बणमसारमवाप्य जंतो: सारोयमीश्वरपदांबुरुहस्य सेवा ॥१
தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையையும் வாசுகி பாம்பையும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் தேடிய போது ஆலஹால விஷம் தோன்றியது. சிவ பெருமான் அதை உண்டு தேவர்களை காத்தார். அவரின் ஆணையின் பேரில் தேவர்கள் மீண்டும் கடலினை கடைந்து அமிர்தத்தை அடைந்தனர். இது நடந்த நாள் துவாதசி திதியாகும்.
தங்கள் சந்தோஷத்தில் சிவனை தொழ மறந்த தேவர்கள் மறு நாள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதுவே திரயோதசி திதியாகும். உடனே இறைவனிடம் சென்று மன்றாட அவரும் அவர்களை மன்னித்து, சந்தோசப்பட்டு நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவமாடினார். இந்த வேளையே பிரதோஷ வேளையாகும்.
HANDPICKED RELATED CONTENT:
பிரதோஷம் - ஒரு விரத வழிகாட்டி |
பிரதோஷ வேளையில் லிங்கத்துக்கு கோயில்களில் பாலும் தேனுமாக அபிஷேகம் செய்வார்கள். அந்த பாலையும் தேனையும் நாம் அளித்தால் நம் கர்மவினைகள் தீரும் என்பதில் ஐயமில்லை. இதை கட்டாயமாக நீண்ட நாள் செய்வோருக்கு நற்பலன்கள் பல காத்து கிடக்கின்றன என்பது உறுதி.
பால் - நீண்ட ஆயுள்
தயிர்- நல்ல குழந்தைகள்
நெய்- முக்தி
கரும்பு சாறு- ஆரோக்கியம்
பஞ்சாமிர்தம்- செல்வம்
தேன்- இனிய குரல்
இளநீர்- சுகம்
அன்னம் (சமைக்கப்பட்ட அரிசி) - உயர்ந்த வாழ்க்கை
சந்தனம் - லட்சுமி கடாக்ஷம்
எலுமிச்சை சாவின் பயத்தை நீக்குகிறது
சர்க்கரை பகைமையை நீக்குகிறது
அரிசி மாவு கடனை தீர்க்கும்.
உங்கள் தேவைக்கிணங்க பிரதோஷ நேரத்தில் சிவனை அபிஷேகம் செய்யும் பொருட்களை வழங்கி இறைவனருள் பெறுங்கள். இன்னல்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply