பிரதோஷம் திரியோதசி திதிகளில் வளர் பிறையிலும் ,தேய் பிறையிலும் வருவது என்பது நாம் அறிந்த விஷயம். இந்த நாளில் சிவனையும் நந்தியையும் வணங்குவதும் நாம் வழக்கமாக செய்யும் ஒன்றே. ப்ரதோஷ காலமாம் மாலை வேளையில் சிவனுக்காக கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்வதும் நமது வழிபாட்டு முறைகளில் ஒன்று. பிரதோஷ விரதம் இருப்பது பல நன்மைகளை தரும்.
பிரதோஷ காலம்
சுக்ல பக்ஷத்திலும் (வளர் பிறையிலும்) கிருஷ்ண பக்ஷத்திலும் (தேய் பிறையிலும்) வரும் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை பிரதோஷ காலமாகும்.
பிரதோஷ விரதத்தை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
ஐப்பசி, கார்த்திகை, சித்திரை , வைகாசி மாதங்களில் வரும் சனி பிரதோஷத்தன்று தொடங்க வேண்டும்.
பிரதோஷ விரதமிருக்கும் முறை
பகலில் உணவு உண்ணக் கூடாது. மாலையில் குளித்து, கோவில் சென்று, இறை வழிபாடு செய்த பின் சிவனடியார்களோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.
பிரதோஷ விரதத்தின் பலன்கள்
பிரதோஷ விரதமிருந்தால் ஏழ்மை, நோய், பயம், திடீர் மரணம், மரண அவஸ்தை, கடன், அவமானம், பாபம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.
பிரதோஷ நேரத்தில் செய்யக் கூடாதவை
பிரதோஷ காலத்தில் தூங்குவது, படிப்பது, பிரயாணம் மேற்கொள்வது, மந்திர ஜபம் செய்வது, உண்பது, எண்ணை தேய்ப்பது, குளிப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.
பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி பகவானின் கொம்பின் மேல் ஆடும் திருக்கோலம் காணக் கிடைக்காதது. இந்த வேளையில் கோயில் சென்று இறைவனிடம் வேண்டி நின்றால் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.
மேலும் பிரதோஷ விரதம் பற்றி அறிய
பிரதோஷத்தை பற்றி புராணக் குறிப்பு
Leave a Reply