ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ பிரதோஷம் செப்டம்பர் 17ம் தேதி வருகிறது.
பிரதோஷ வேளையை நினைத்தால் சிவனாரின் பிரதோஷ நர்த்தனம் நமது மனக்கண்ணில் தோன்றுகிறது.
பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளில் ஆடும் காட்சி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இந்த உலகத்தை ஆட்டி வைக்கும் நடனமே சிவதாண்டவம்.
அவர் இந்த உலகத்தை தனது நாட்டியத்தின் மூலம் இயக்குவதை சுட்டிக் காட்டுகிறது சிவ தாண்டவம் .
சிவனார் இந்த பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியவர்.
எல்லாவற்றையும் உருவாக்கி, பின்னர் அழித்து, மனிதனை மாயையிலிருந்து விடுவித்து, முக்தி அளிப்பவர் சிவன்.
சந்த்யா தாண்டவம் சிவன் பிரதோஷ வேளையில் நடனமாடுவது.
சந்த்யா தாண்டவம் சிவன் பிரதோஷ வேளையில் அன்னை கௌரியின் முன் நடனமாடுவது.
அன்னை கௌரி ரத்ன சிங்காசனத்தில் அமர்ந்திருக்க, நந்தியின் கொம்புகளில் ஆடும் சிவனாரின் நடனத்திற்கு சரஸ்வதி வீணை வாசிக்க, லக்ஷ்மி பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, விஷ்ணு மிருதங்கம் வாசிக்க, பிரம்மா லயத்தினை கவனித்துக் கொள்கிறார். மற்ற தேவ தேவர்கள் சூழ்ந்திருந்து இந்த காட்சியை கண்டு களிக்கிறார்கள்.
இதை விட தெய்வீகம் நிறைந்த காட்சி உண்டோ?மனதில் நினைக்கும் போதே பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறதே?
சிவனாரின் கட்டளைப்படி அவரது பணியாளர் தண்டு பரத முனிவருக்கு நாட்டிய லக்ஷணங்களை எடுத்து கூறினார். இதனை பின்பற்றி பரதர் ஏற்படுத்திய நாட்டிய கலையே பரதநாட்டியம்.
பிரதோஷத்தின் தனி மகிமை அறிந்த பிறகு அந்த வேளையில் சிவனை முழு மனதோடு வணங்கி அவர் அருள் பெறலாமே?
நாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் . மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply