மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி ஜனவரி மாதம் 5ம் தேதி வருகிறது. நாம் பிள்ளையாரை வணங்காமல் எந்த ஒரு காரியமும் ஆரம்பிப்பதில்லை. மேலும், அவர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார்.
ஆனை முகத்தோனின் துதிக்கையை நினையாதவர் இல்லை. இந்த துதிக்கை வலது புறமாகவும் இருக்கும். இடது புறமாகவும் இருக்கும். நேராகவும் இருக்கும். நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஆனை முகத்தோனின் துதிக்கை எந்த திசையில் இருக்கும் என்பதிலிருந்து நாம் சில முக்கிய விஷயங்களை அறிகிறோம்
துதிக்கை இடமாக உள்ள விநாயகரை வீட்டில் வைத்து வணங்குவது மிக நல்லது. இது நிலவின் குளிர்ச்சியான, வருடும் சக்தியை குறிக்கும். இடது புற துதிக்கை உடலில் இடது நாடியைக் குறிக்கிறது
இது சூரியனின் பலம் மிகுந்த சக்தியைக் குறிக்கும்.வலது புற துதிக்கை உடலில் பிங்கள நாடியைக் குறிக்கும். சரியான முறையில் வழிபடுவோருக்கு துரிதமான பலன்களைக் குறிக்கும். பொதுவாக கோவில்களில் வலது புறம் துதிக்கை கொண்ட விநாயகரை வைப்பது நல்லது
நேராக இருக்கும் துதிக்கை சூஷ்ம நாடியைக் குறிக்கும். நேரான துதிக்கை கொண்ட வினையாகப் பெருமானின் உருவம் மிகவும் அபூர்வமானது. இந்த விநாயகரை வழிபட்டால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்
வீட்டில் லட்டைத் தொட்டுக் கொண்டு உள்ள துதிக்கை இருக்கும் பிள்ளையாரை வைத்தால் சுபிக்ஷமாக இருக்கும். லட்டு ஒரு உணவு பதார்த்தத்தால் ஆனது. எனவே அதனைத் தொட்டுக் கொண்டிருக்கும் துதிக்கை உடைய பிள்ளையார் நமது வீட்டில் பொருள் வரவைக் கொடுப்பார்.
பொதுவாகவே உட்கார்ந்த நிலையில் இருக்கும் பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்குவது பொருளாதார மேம்பாட்டைக் கொடுக்கும்.
சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோமாக!
மேலும் படிக்க
Leave a Reply