மாசி மாதத்தின் கிருஷ்ணபக்ஷ பிரதோஷம் 2௦18ம் வருடத்தில் பிப்ரவரி மாதம் 13ம் தேதி வருகிறது.
பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்த நாள். எனவே அந்த நாளில் கோயில் சென்று சிவனை வணங்கி அவரின் அருளைப் பெற நாம் அனைவரும் விழைகிறோம்.
இந்த வருடம் பிப்ரவரி 13ம் தேதி அன்று வரும் பிரதோஷம் விசேஷமானது. ஏனென்றால் இதே நாளில்தான் மகா சிவராத்திரியும் வருகிறது
Loமகா சிவராத்திரியைப் பற்றிய கதை இது:
பாற்கடலை அசுரரும் தேவரும் கடைந்த போது, அமிர்தத்துடன் எழுந்த விஷத்தை சிவனார் உண்டார். அது அவரது தொண்டையிலேயே தங்கியமையால் அவர் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது மகா சிவராத்திரி அன்றுதான். உலகைக் காக்கும் பொருட்டு விஷத்தை ஏற்றுக் கொண்ட சிவனை இந்த நாளில் நாம் நன்றியுடன் வணங்குகிறோம்.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரதோஷ வழிபாடு அமைந்துள்ளது: விஷத்தை உண்ட களைப்பில், சிவன் பார்வதித் தாயின் மடியில் படுத்துக் களைப்பாறிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே அவரை தரிசிக்க வந்த தேவர்களையும், கடவுளரையும் காண விடாமல் நந்தி தேவன் தடுத்தார். அன்னையும், ஐயனும் தனித்திருந்ததே இதற்குக் காரணம்.
களைப்பு நீங்கி வெளியே வந்த சிவன் அனைவரையும் கண்ட ஆனந்தத்தில் நந்தியின் கொம்புகளின் மேல் ஆனந்தத் தாண்டவமாடினார். இந்த வேளையே முதல் பிரதோஷ வேளையாகக் கருதப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த நாள் ஒரு கிருஷ்ணபக்ஷ திரயோதசி. அன்றிலிருந்தே திரயோதசி அன்று பிரதோஷம் அனுசரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த வருடம் மகா சிவராத்திரியும் பிரதோஷமும் ஒரே நாளில் அமைந்து உள்ளன. இத்தகைய அரிய வாய்ப்பினை நழுவ விடாமல் சிவனடி பணிந்து, நன்மைகள் பெறுவோமாக!
Leave a Reply