மஹாளய பக்ஷம் 2017 வருடம் செப்டம்பர் 6 ம் தேதி தொடங்கி 19 ம் தேதி முடிகிறது.
இது பித்ருகளுக்களை கரையேற்றும் நேரம் ஆகையால் பித்ரு பக்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது. பித்ரு பக்ஷம் பொதுவாக ஆவணி மாதத்தின் பௌர்ணமி அல்லது மறுநாள் தொடங்கி அமாவாசை அன்று முடிகிறது.
மஹாளய பக்ஷத்தின் போது ஸ்ராத்தம், தர்ப்பணம், தானம் செய்வது நல்லது. இது பித்ரு லோகத்தில் இருக்கும் நமது முன்னோர்கள் சுவர்க்கம் நோக்கி பயணிக்க உதவும்.
இந்த நேரத்தில் இறந்த முன்னோருக்கு உரிய சடங்குகளை செய்வதன் மூலம் அவர்களுக்கு நிறைவேறாமல் இருந்த ஆசைகளை பூர்த்தி செய்கிறோம்.
ஏதாவது அசம்பாவிதமான சாவு குடும்பத்தில் ஏற்பட்டிருந்தால் பித்ரு பக்ஷத்தில் பித்ரு சேவை செய்வதன் மூலம் அதற்கு சாந்தி செய்து கொள்ளலாம்.
இந்த நேரத்தில் நமது முன்னோர்களில் ஒருவர் பூமிக்கு இறங்கி வந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஐதீகம். இதனால் அவர்களுக்கு மஹாளய பக்ஷத்தில் சேவை செய்ய வேண்டியது கட்டாயம்.
பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.
கொடை வள்ளல் கர்ணன் தனது வாழ்நாளில் தனது மூதாதையர்க்கு அஞ்சலி செலுத்தாததால் இந்த நேரத்தில் பூமிக்கு வந்து அவர்களுக்கு சேவை செய்ததாக ஒரு கதை உண்டு.
மகாபரணி, மத்யாஷ்டமி, சர்வபித்ரி அமாவாசை மஹாளய பக்ஷத்தின் முக்கிய நாட்களாகும்.
பொதுவாக எல்லா நாட்களிலுமே தர்ப்பணம் செய்வது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.
ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் கீழ்கண்ட திதிகளில் செய்வது சிறப்பு.
தனது தாய், தந்தையர்களின் இறந்த திதி
மஹாபரணி – (செப்-11 - ஞாயிறு கிழமை)
மத்யாஷ்டமி – (செப்-13 - புதன்கிழமை)
மஹாவ்யதீபாதம் – (செப்-14 – வியாழக்கிழமை)
விபத்தினால் மரணம் அடைந்தவர்களுக்கு சதுர்த்தசி அன்று மஹாளயம் செய்ய வேண்டும். (செப்-18 – திங்கட்கிழமை)
குடும்பத்தில் யாராவது சன்யாசம் வாங்கி சித்தியாகி இருந்தால் அவர்களுக்கு துவாதசி திதியன்று மஹாளயம் செய்ய வேண்டும்
மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களுக்கு சேவை செய்து அவர்கள் நல்லாசி பெறுவோம். அவர்கள் கடைத்தேற வழியும் வகுப்போம்.
Leave a Reply