கார்த்திகை விரதம் மாதம்தோறும் கார்த்திகை நக்ஷத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுவது.முருக பக்தர்களால் பெரிதும் போற்றப்படுவது.
தை மாதத்தில் கார்த்திகை விரதம் ஜனவரி 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கார்த்திகேயன், ஆறுமுகன், சுவாமிநாதன் என முருகனுக்குப் பெயர்களுண்டு. இவற்றின் பெயர்க் காரணம் அறிவோமா?
ஆறு முகம் கொண்டவர் முருகன்.ஆறு குழந்தைகளாகப் பிறந்த அவரை அன்னை பார்வதி ஆறுமுகம் கொண்ட குழந்தையாக மாற்றினார். எனவே அவர் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார்.
குழந்தைப் பருவத்தில் முருகன் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். எனவே அவருக்குக் ‘கார்த்திகேயன்’ எனப் பெயர்.
தனது தகப்பனுக்கு பிரணவத்தின் அர்த்தத்தை விளக்க எண்ணிய முருகன் தான் தகப்பன் சாமியாக ஆனார். குரு ஸ்தானத்தில் இருந்து சுவாமிமலையில் தகப்பனுக்கு பிரணவத்தின் விளக்கம் கொடுத்தார். அவர் ‘சுவாமி’யாக மாறி தனது ‘நாதன்’ சிவனுக்கு உபதேசம் செய்ததைக் கண்டு மகிழ்ந்த பார்வதி அவரை ‘சுவாமிநாதன்’ என அழைத்தார்.
எந்த நாமம் கொண்டு அழைத்தாலும்,நமக்கு ஓடோடி வந்து அருளும் முருகனை நாம் கார்த்திகை விரதமிருந்து வழிபடுவது சிறப்பான ஒன்றுதானே?
Leave a Reply