சஷ்டி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருக பக்தர்களால் மிகுந்த சிரத்தையுடன் அனுசரிக்கப்படும் விரதமாகும். இந்த நாளில் முருகனை வணங்குவதோடு, அவர் கையிலிருக்கும் வேலையும் வணங்குவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும்.
ஆறு முகத்தோடு, கையில் வேலுடன் கந்த வேள் காட்சி அளிக்கும் திருக்கோலம் தெய்வீகம் ததும்பும் காட்சி அல்லவா? இந்த வருடம், மாசி மாத சஷ்டி விரதம் பிப்ரவரி 21ம் தேதி அன்று வருகிறது.
வேல் முருகனுக்காக அன்னை பார்வதியால் படைக்கப்பட்ட ஆயுதம். முருகன் சூரபத்மனை,தாரகாசுரனை,சிங்கமுகனை அழிப்பதற்காக தேவர்களின் படைகளுக்கு தலைமை தாங்கினார். அப்போது அவரது ஆயுதமாக வேல் ஒன்றினை அன்னை பார்வதி தனது சக்தியின் வடிவாகத் தோற்றுவித்தார். இந்த வேல் கொண்டே முருக பெருமான் சூரபத்மனை போர்க்களத்தில் சாய்த்தார்.
வேல் வெற்றியின் சின்னமாக விளங்குகிறது.
வேலை வணங்குவோருக்கு வாழ்வில் எந்த ஒரு பயமும் இல்லை.
வேலின் துணை கொண்டு நாம் நமக்கு தொல்லை தரும் சக்திகளை அழித்து விடலாம்.
சூரபத்மனின் அழிவு நம்முள் இருக்கும் அகந்தையின் அழிவை உணர்த்துகிறது. சூரபத்மனை அழிக்க முருகனுக்கு துணை நின்றது வேலாகும்.
அன்னை பார்வதியின் சக்தியில் பிறந்தது வேல். இது ஞானத்தின் இருப்பிடம்.
வேலை வணங்கினால் ஆன்மீக அறிவு கிடைக்கும்..
வேல் உலகில் நன்மை தீமைக்குள் நடக்கும் போராட்டத்தை உணர்த்துகிறது. இறுதியில் நன்மையே வெல்லும் என்பதை காட்டுகிறது.
வேல் ஒரு கூர்மையான ஆயுதம். அதன் கூர்மையான நுனி ஆன்மிக சக்தியின் கூர்மையை காட்டுகிறது.
வேலின் நீளமும் ஆழமும் மனித சிந்தனைகளின் ஆழத்தை காட்டும் வண்ணம் அமைந்து உள்ளன.
வேலுண்டு வினை தீர்க்க. அந்த வேலை வணங்கி, சஷ்டி விரதமிருக்கும் நாளில் நம் வினை தீர்க்கும் வழி தேடுவோமே?
Leave a Reply